....அன்று பல உலக நாடுகள் இலங்கை அரசின் அநீத்pயான செயல்களையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்து மகிந்தவின் நடவடிக்கைகளுக்கு ஓத்துழைப்பு வழங்கின.
நமது தமிழ் மக்கள் உலகின் பல நாடுகளிலும் கவனயீர்ப்பு ஊர்வலங்களை நடத்திய வண்ணம் வீதிகளில் இறங்கிய போதும் உலக நாடுகள் அதைக் கவனிக்கத் தவறிவிட்டன. அநீதியை ஆதரிக்கும் வகையில் அன்றைய நாட்களில் உலக நாடுகள் செயற்பட்டன.
ஆனால் தற்போதைய நாட்களில் நிலைமை நமது கோரிக்கைகளுக்கு சாதகமாகவே உள்ளது. மறுபக்கத்த்pல் இதுவரைகாலமும் இலங்கை அரசாங்கமும் அதன் ஜனாதிபதி மகிந்தாவும் நடத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜக ஆட்சி போன்றவற்றுக்கு எதிராக மெல்ல மெல்ல எதிர்ப்புக் குரல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன.
நமது போராளிகளையும் பொது மக்களையும் அந்த முள்ளிவாய்க்கால் என்னும் வளமான மண்ணில் நாம் இழந்து போனாலும், கடந்த கால ஓலங்கள் சற்று மறைவனவாக நமக்கு தென்படுகின்றன.
இவ்வாறான மாற்றங்களை அரசாங்கம் என்ற ரீதியில் பிரித்தானிய அரசாங்கம் சற்று மென்மையான போக்கு கொண்டு நமது மக்களின் குரல்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய விஜயங்களின் போது நமது மக்கள் மகிந்தவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஏற்ப மைதானங்களையும் வீதிகளையும் விமான நிலையங்களின் முக்கிய இடங்களையும் நாடியபோது அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வண்ணம். நமது மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கான ஆதரவை மறைமுகமாக வழங்கியது.
அந்த நாட்களில் பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தமிழர் போராட்டங்கள் உலகளவில் நமது மக்களுக்கு வெற்றிகளை ஈட்டு தந்தது மட்டுமல்லாது, இலங்கையி;ன் அரசாங்கத்திற்கும் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தின.
இவ்வாறு நாம் பிரித்தானியாவை நோக்கும் போது அதற்கு அடுத்தபடியாக அவுஸ்த்திரேலியாவை எடுத்துக்கொள்ளலாம். அவுஸ்திரேலிய அரசாங்கம் கூட இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்த வண்ணம் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டது.
இவ்வாறிருக்கையில் உலகில் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் கனடாவில் ஆட்சியில் இருக்கும் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியி;ன் அண்மைக்கால செயற்பாடுகள் இலங்கை விடயத்த்pல் நியாயத்தை ஆதரிக்கும் ஒரு விடயமாகவும் அணுகுமுறையாகவும் நாம் பார்க்கின்றோம்.
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த கனடாவின் குடியுரிமை மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு ஜெய்சன் கென்னி அங்கு பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.
ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பாக தனதும் தனது அரசாங்கத்தினதும் கண்டனத்தையும் அவர் கொழும்பில் வெளியிடத் தவறவிலை.
அமைச்சர் ஜெய்சன் கென்னியின் கருத்துக்கள் தொட்பாக இலங்கை அமைச்சர்கள் பலர் தமது ஆட்சேபனைகளை வெளிpயிட்டு இருந்தமையை நாம் இந்த சந்தர்ப்பத்தில் நமது வாசகர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
இதைப்போலவே கனடாவின் மற்றுமொரு அமைச்சர் தற்போது வெளியிட்ட அறிக்கையொன்றையும் அத்தோடு அவர் இலங்கை அரசிற்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களையும் நாம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
மேலும் அந்த அமைச்சர் கனடாவிற்கான இலங்கைத் தூதுவரான திருமதி சித்திராங்கனியை தனது அமைச்சு அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை அரசானது தொடரந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகைகள் பற்றிய தனது ஆட்சேபனையையும் தெரிவித்துள்ளார்.
ஆமாம் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜோன் பெயார்ட் அவர்களி;ன் நீதிக்கு ஆதரவான இவ்வார செயற்பாடுகளையே நாம் நமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
அத்துடன் கனடாவின் குடியுரிமை அமைச்சர் கௌரவ ஜெய்சன் கென்னி அவர்கள் நாளை சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் நடத்தவுள்ள தனது இலங்கை விஜயம் தொடர்பான கலந்துரையாடலில் ஏராளமான தமிழ் மக்கள் சமூகமளித்து தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்ற செய்தியையும் நாம் நமது வாசக அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
நமது உதயன் பத்திரிகைக்கு அனுப்பப்பட்டுள்ள விசேட அழைப்பையும் நாம் இவ்வார உதயனின் பின்பக்கத்தில் வர்ணத்தில் பிரசுரித்துள்ளோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கனடிய அரசாங்கத்தி;ன் தற்போதை செயற்பாடுகள் பல அநீதிக்கு எதிரான குரலாகவும், அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள நமது ஈழத்தமிழர்களின் கண்ணீரை கொஞ்சம் கொஞ்சமான தணிக்கும் ஒரு மனித நேய நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கனடாவின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சி அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நமது வாசக அன்பர்கள் சார்பாக சமர்ப்பிக்கின்றோம்.
கதிரோட்டம்: கனடா உதயன்
Geen opmerkingen:
Een reactie posten