தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 januari 2013

சிவில் நிர்வாக விடயத்தில் இராணுவத் தலையீடு ஏன்?


யாழ்.குடாநாட்டில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்றனர். சிவில் அதிகாரிகள் போன்று இராணுவத்தினரும் தகவல் திரட்டும் நடவ டிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

குடாநாட்டின் கரையோரப் பகுதிகளில் இதனை நான் அவதானித்துள்ளேன் என்று யாழ்.வந்துள்ள பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் றொபின் தெரிவித்தார்.

இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் ஏன் தலையீடு செய்கின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மேலதிக அரச அதிபருடனான சந்திப்பின் போதே தூதுவர் இந்தக் கேள்வி யைத் தொடுத்தார்.யாழ். மாவட்டத்துக்கு புதன்கிழமை வருகை தந்த பிரான்ஸ் தூதுவர் பல் வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்.மாவட்ட செயலகத்துக்குச் சென்ற அவர் மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்துப் பேசினார்.தூதுவருடனானன இந்தச் சந்திப்புத் தொடர்பாக மேலதிக அரச அதிபர் தெரிவித்தமை வருமாறு:

யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலேயே தூதுவர் ஆராய்ந்தார். வீதி மற்றும் உட்கட்டுமானங்களில் கடந்த காலங்களில் இருந்ததை விட யாழ். மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது என்று தூதுவரிடம் கூறினேன்.



மீன் பிடித்துறையில் 1983ஆம் ஆண்டு காணப்பட்ட அடைவு மட்டத்தை விடத் தற்போது அது குறைந்துள்ளமை தொடர்பில் தூதுவர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அயல்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் முறையற்ற மீன்பிடி உபகரணப் பாவனை குறைவடைந்ததால் தற்போது மீன்பிடித்துறையில் முன்னேற்றம் அடைந்து வருவதைக் குறிப்பிட்டேன்.

போரால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் தகவல்கள் தொடர்பிலும் பிரான்ஸ் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். மேலும் வறட்சிக் காலங்களில் தீவகத்தில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறை தொடர்பிலும் அவருக்கு விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

இறுதியாக அவர், சிவில் நிர்வாக விடயங்களில் இராணுவத்தினரின் தலையீடு தொடர்பாக என்னிடம் கேட்டார்.

யாழ்.குடாநாட்டின் கரையோரப் பகுதிகள் ஊடாகத் தான் சென்று கொண்டிருந்தபோது இராணுவத்தினர் தகவல் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானித்ததாகவும்,சிவில் அதிகாரிகாரிகள் போன்று பாவனை செய்து இராணுவத்தினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இராணுவத்தினர் இன்னமும் ஏன் சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றனர் என்று தூதுவர் கேள்வி எழுப்பினார்


Geen opmerkingen:

Een reactie posten