அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த அறிக்கையை கொண்டு வரும் நோக்கில் இந்த உத்தேச ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான தொழில்நுட்ப சார் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஜெனீவாவில் இம்மாதம் ஆரம்பிக்கும் கூட்டத்தொடரில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தல் மற்றும் இறுதிக் கட்ட யுத்தத்தின் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல் சம்பங்கள் போன்றன தொடர்பில் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த அறிகை பகிரங்கப்படுத்தப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த அறிக்கையை சிறீலங்கா அரசாங்கம் தற்போது உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நவனீதம்பிள்ளை சிறீலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தன் பின்னரே அமெரிக்கா சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தை கொண்டுவர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten