இலங்கை அகதிகள் படகுகளை இலங்கை கடற்பரப்ப்பில் அல்லது அதை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்துவதற்கு ஒஸ்ரேலிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருந்தது. இந்த இணக்கப்பாடு இலங்கையில் உயிராபத்துள்ளாக கூறி அங்கிருந்து வெளியேறும் அகதிகளை அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டப்படும் படைகளைக் கொண்டு கைது செய்விப்பது அகதிகளுக்கான ஜெனீவா சாசனத்தின் அடிப்படைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது
புகலிடம் கோரும் நோக்கில் ஒஸ்திரேலிய கடற்பரப்புக்குள் வரும் படகுகளை சர்வதேச கடற்பரப்பில் தடுத்து நிறுத்த ஒஸ்திரேலிய கடற்படையினர் பயன்படுத்தப்படுவர் என்று அந்த நாட்டின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளதற்கு அகதிகளுக்கான ஐநா உயர்ஸ்தானிகரகம், விசனம் தெரிவித்துள்ளது
இவ்வாறு வரும் படகுகளை இலங்கையின் கரையிலேயே தடுத்து நிறுத்த சிறீலங்கா கடற்படையினரின் உதவிப் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அத்துடன் அகதிப்படகுகளை சர்வதேச கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்படுவது சர்வதேச சட்டங்களை ஒஸ்ரேலியா மீறுவதாக அமையாது என்று மொரிசன் தெரிவித்திருந்தார்
அகதிகளுக்கான ஜெனீவா சாசனம், மேலதிக எல்லைகள் தொடர்பான அதிகாரத்தை கொண்டிக்கவில்லை என்றும் மொரிசன் சுட்டிக்காட்டியிருந்தார்
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம், இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அகதிக்கோரிக்கையுடன் வரும் எந்த ஒரு ஆளையும் கடலில் வைத்து எவ்வித காரணங்களையும் கருத்திற்கொள்ளாமல், திருப்பியனுப்புவது, சர்வதேச சட்டங்களை அவுஸ்திரேலியா மீறுவதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான எந்த ஒரு முயற்சியும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவே அமையும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அகதி சட்டத்தின்படி,அவுஸ்திரேலியா, தமது கடற்பரப்புக்கு வரும் எந்த ஒரு படகையும் அகதி கோரிக்கைக்கான முதல் பரீட்சிப்பு இன்றி திருப்பியனுப்பமுடியாது என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten