இலங்கைக்குக்கு கால அவகாசம் தேவை!- ஜி.எல்.பீரிஸ்
மூன்று தசாப்தங்கள் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவை லண்டனில் சந்தித்த போது வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளை போன்று இலங்கையிலும் நல்லிணக்க முயற்சிகள், மெதுவான போக்கில் நகர்வதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பல வருடங்களாக நீடித்த பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்து விடமுடியாது.
அதனை மேற்கொள்ள இலங்கைக்கு கால அவகாசம் தேவை என்று அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார்.
போரின் போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரை மீண்டும் குடியமர்த்த முடிந்துள்ளது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான கண்ணிவெடிகளை இலங்கை அரசாங்கத்தினால் இந்த மூன்று வருடங்களுக்குள் அகற்ற முடிந்திருக்கிறது என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmryCTcNXlp0.html
Need some more time: G.L.Peiris |
[ Friday, 08 February 2013, 08:09.15 AM GMT +05:30 ] |
Minister of External Affairs G.L.Peiris met Commonwealth General Secretary Kamalesh Sharma at London recently said country which suffered from the thirty years of war need some more time to implement reconciliation process in the country. |
SriLanka has taken steps to implement reconciliation process in the country. It’s unable to solve problem by one night.
3 million people have displaced during the time of war. We have taken steps to resettle them. Within the past three year’s government as evacuated thousand of landmines in the war zones, minister said
http://eng.lankasri.com/view.php?200dBmYYdac44QWAA334ea44Y5Bee023dlOmmcddccmOlRx220eBB5Y4aae43yKMQQ4caddYmBdd02 |
|
Geen opmerkingen:
Een reactie posten