தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 februari 2013

இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் உண்டு என அரசால் பொறுப்பு கூற முடியுமா?- பாஸ்க்கரா


இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பத்திரிகைகள் மீதான தாக்குதல்கள் நெருடல்கள் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் இலங்கையில் பத்திரிகை சுதந்திரம் இல்லை என அரசால் அறிவிக்கப்பட வேண்டும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.
அரசால் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்க முடியவில்லை என அரசு ஒத்துக்கொள்ள வேண்டும் இல்லையேல் பாதுகாப்புக்காக என்ன உத்தரவாதம் வழங்க முடியும் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் என்ன பரிகாரம் என தினக்குரல் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை கண்டித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் நடக்கும் பத்திரிகையாளர் மீதான தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக அரங்கேற்றப்படும் சம்பவங்கள் என தெட்டத்தெளிவாக தெரிகின்றது அரசு இதை கட்டுப்படுத்த முடியாததை ஒத்துக் கொள்ள வேண்டும் இல்லையேல் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
உலகிற்கு பத்திரிகை சுதந்திரம் உண்டு என தெரிவிக்கும் அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் அதுவும் உச்ச பாதுகாப்பு உள்ள இடத்தில் இடம்பெற்ற நிகழ்வை தடுக்க முடியாது போனதேன். இவ்வேளையில் உலக நாடுகள் இவ்விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டிய கட்டாயம் களிந்து வந்துள்ளதை காட்டுகின்றது.
அரசு தகுந்த பரிகாரம் காணாது விடின் பொதுநலவாய செயலாளரின் முடிவு போல் பல அதிர்ச்சி சம்பவங்களை இலங்கை சந்திக்க வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten