ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மலேசியாவின் கில்லாங் பகுதி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.
2012ம் ஆண்டு சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு வாக்களிப்பில் மலேசியா பங்கெடுக்காதிருந்தது.
தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் மற்றுமொரு பிரேரணையினை அமெரிக்காகொண்டு வரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் வாழுகின்ற புலம்பெயர் தேசங்களிலும் மட்டுமல்ல மலேசிய தமிழகம் என உலகத் தமிழர்களாலும் போராட்டங்கள் அரசியற் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஓருங்கிணைப்பில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
இப்பேரணியில் பொதுமக்களுடன் மலேசிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பல தமிழர் அமைப்பு பிரமுகர்களும் பங்கெடுத்து கொண்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசிய தோழமை மையத்தின் ஓருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆறுமுகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயற்பாடுகளை சமீபத்திய காலங்களில் தீவிரப்படுத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
Geen opmerkingen:
Een reactie posten