பாதுகாப்புக்காக இராணுவ முகாம்கள் அமைந்துள்ள நிலங்கள் சுவீகரிக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் பி.பி.சி ஊடகத்திற்கு வழங்கியுள்ள கருத்துத் தொடர்பில், விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஒரு பாலகனுக்கு, பிஸ்கட்டும் தண்ணீரும் கொடுத்துவிட்டு, அடுத்த கணமே மிக அருகிலிருந்து நெஞ்சில் சுட்டு படுகொலை செய்திருக்கின்றார்கள். இந்த இராணுவம் தமிழர்களுக்கு ஒருபோதும் பாதுகாப்பு வழஙக முடியாது.
அவ்வாறு பாதுகாப்பு வழங்குவதாக கூறினால், அதைவிட நகைப்பிற்குரியது வேறு ஒன்றும் இருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் 9 வருடங்களுக்கு முன்னர் கூறியிருக்கின்றது. மக்களுடைய நிலங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழில் கூறியுள்ளார்.
மக்களுடைய நிலங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று, சர்வதேச நாடுகளும், ஜ.நாவும் கூட கூறியிருக்கின்றது மக்களுடைய நிலங்கள் மக்களிடமே மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள மக்களுடைய காணிகளை சுவீகரிக்கப் போவதாக இராணுவம் கூறுகின்றது.
ஆனால் நிலத்திற்குச் சொந்தமான மக்கள் தெருக்களிலும், முகாம்களிலும் என்ன நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது இந்த இராணுவப் பேச்சாளருக்குத் தெரியாது. மக்களுடைய நிலங்களுக்கு இழப்பீடு கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.
இழப்பீடு கொடுப்பது ஒரு புறமிருக்கட்டும், அந்த மக்களுடைய காணிகளைப் போன்று வளம் சுரக்கும் காணிகளையும், அவர்கள் வாழ்ந்த வீடுகளைப் போல் வீடுகளும், அவர்களுடை நிம்மதியான வாழ்iவும் இவரால் பெற்றுக் கொடுக்க முடியுமா? அல்லது இதுவரை எத்தனை பேருக்கு இழப்பீடு கொடுத்தருக்கின்றார்கள் என்று கூறமுடியுமா?
எனவே இராணுவப் பேச்சாளருடைய கருத்துக்கள் அவர்களிடமுள்ள மமதையினை கா ட்டுகின்றதே தவிர அவர்களுடைய பேச்சில் நியாயமில்லை.
வடக்கில் ஜனநாயக பூர்வமான ஆட்சி இல்லை, இராணுவ சண்டித்தனமே நிறைந்திருக்கின்றது. எங்கள் மண்ணில் நாங்கள் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten