இலங்கையின் சுதந்திர தினம் நாளை அனுஸ்ட்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையின் பல பாகங்களிலும் இலங்கையின் தேசியக்கொடி விற்பனையாகிக் கொண்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
இது ஒரு புறமிருக்க இலங்கை அரசாங்கம் அனைத்து வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றுமாறும் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
இதனைவிட ஏற்றப்படும் அல்லது பறக்க விடப்படும் தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் அல்லாமல் உயரமாக நிமிர்ந்த கம்பங்களில் ஏற்றுமாறும் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் காத்தான்குடி பகுதியில் மாத்திரம் பல நூற்றுக்கணக்கான தேசியக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, தழிழர்கள் செறிந்து வாழும் எந்தவொரு பகுதியிலும் இவ்வாறான இலங்கையின் தேசியக் கொடிகள் ஏற்றப்படவில்லை என்பதனையும் காணக்கூயதாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten