இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் எங்கும் பரந்தளவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பலத்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார்.
இன்று மாலை திருப்பதிக்கு செல்லும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பலத்த பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெசோ அமைப்பு சார்பில் வள்ளூவர் கோட்டத்தில் மஹிந்த ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கருப்பு உடையில் சென்னையில் காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் திமுக பொருளாளர் ஸ்டாலின், திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., சுப.வீரபாண்டியன் மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில், ராஜபக்சே வருகையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, இலங்கையில் தமிழ் கலாச்சாரம், தமிழ் பெயர்கள், தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களின் தமிழ் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
மொழியையும், இனத்தையும் அழிக்க சிங்கள அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. ராஜபக்சேவுக்கு பாடம் புகட்டவே தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அனைவரும் ஒற்றுமையுடன் போராடினால் வெற்றிக் கிடைக்கும். முன்னர் ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்" என்று கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten