தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

பெர்லின் தூதரகத்தில் சுடுகாடாய் மாறிய சிறீலங்கா சுதந்திர தின கொண்டாட்டம்!


சிங்கள பௌத்த பேரினவாத அரசின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யேர்மனி பெர்லின் நகரில் கண்டன கவனயீர்ப்பு  தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டது .
65 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் தேசம் நிராகரிக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் அழிக்கப் பட்டு காலம் காலமாக ஈழத்தமிழர்கள் மீது இனவழிப்பு அரங்கேறுகின்றது.
சர்வதேசத்தை ஏமாற்றும் வகையில் புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா தூதரகங்கள் தமது கைக் கூலிகளை வைத்து சுதந்திர தினத்தை ஆரவாரமாக கொண்டாடிவரும் நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் தமது எதிர்ப்புகளை காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் யேர்மனியில் பெர்லின் நகரில் சிறீலங்கா தூதரகத்தின் முன்றலில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்த வேளையில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களுக்கு எதிராக அமைந்திருக்கும் சிங்கள பௌத்த இனவெறி அரசின் அரசியலமைப்பை நிராகரித்து அரசியலமைப்பு சாசனத்தை காலால் மிதித்து எரித்தனர்.
65 ஆண்டுகளாக அனைத்து வழிகளிலும் போராடிய தமிழ் மக்களுக்கான உரிமைகள் இன்றும் நிராகரிக்கப்பட்டு என்றும் இல்லாதவாறு தொடரும் தமிழர்கள் மீதான இனவழிப்பு காரணத்தாலும் அத்தோடு கடந்த காலத்தில் தமிழர்கள் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையிலும் எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு சிறீலங்காவின் அரசியலமைப்புக்கு அப்பால் மட்டுமே அமைய வேண்டும் என்று கவனயீர்ப்பில் கலந்துகொண்ட மக்கள் உறுதி எடுத்தனர்.
வழமைபோல் சிங்கள புலனாய்வு ஊழியர்கள் தூதரகத்தின் உள்ளே நின்று ஒளித்திருந்து கவனயீர்ப்பில் கலந்துகொண்ட மக்களை படம் பிடித்திருந்தது வேடிக்கையாக இருந்தது.



Geen opmerkingen:

Een reactie posten