அன்றைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட புரட்சியை முறியடித்து மக்களைக் காப்பாற்றிய பெருமை அவருக்கே உண்டு என பிரதி கல்வியமைச்சரான நந்தமித்திர எக்கநாயக்கா முன்னர் தெரிவித்திருந்தார். நான் அப்போது எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்படியிருந்தும் நான் கூறிய பல விடயங்களைக் கருத்தில் கொண்டு கோதபாய ராஜபக்ஷ செயற்பட்டார். மாத்தளையில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி நடவடிக்கைகள் எவ்வாறு அடக்கப்பட்டது என்பது எனக்கும் மக்களுக்கும் தெரியும் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
மாத்தளை வைத்தியசாலை வளவில் மீட்கப்பட்ட நூற்றுக் கணக்கான மனித மண்டையோடுகள் மற்றும் மனித எச்சங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். குறித்த மண்டையோடுகளுக்கும் மனித எச்சங்களுக்கு உரியவர்கள் 1988/89 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது. இக் கொலைகள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அனைத்து சிங்களத் தரப்பும் இதில் மெளனம் சாதித்துவருகிறது.
Geen opmerkingen:
Een reactie posten