தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 februari 2013

புலிகளுக்கு எதிராக 15 நாடுகளை அணிசேர்க்க அமெரிக்க முயன்றது: விக்கி லீக்ஸ் !


அமெரிக்கா ராஜாங்கச் செயலாளர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுமார் 15 நாடுகளை அணிசேர்க்க நினைத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டு ஜூன் மாதம், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியுள்ள கேபிள் செய்தியில் இது தொடர்பான விடையத்தை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் சர்வதேசத்துக்கோ இல்லை அமெரிக்காவுக்கோ, பெரும் அச்சுறுத்தலாக இல்லை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர், இருப்பினும் இலங்கை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, 15 நாடுகளை இணைத்து, புலிகளுக்கு நிதி சேகரிப்பவர்கள் தொடர்பாகவும், மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பாகவும் ஆராய இருந்துள்ளார்கள். 

இதனை அமெரிக்கா இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்கள். புலிகளுக்கு கிடைக்கும் நிதியை முடக்கவும், அவர்களுக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வோரை குறிவைக்கவும் அமெரிக்கா அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது , என்பதற்கு அமெரிக்க தூதர் அனுப்பியுள்ள இத் தகவல் சிறந்த உதாரணமாக உள்ளது. பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்ட இத் தகவலை ஊடறுத்து விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten