நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிட , மைத்திரி பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற செய்தி சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அதிர்வின் புலனாய்வு நிருபர் தெரிவித்துள்ளார். முதன்மை வேட்பாளராக மகிந்த போட்டியிட மாட்டார் என்றும். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான , வேட்ப்பாளராக மகிந்த தெரிவாகியுள்ளார். இதேவேளை அவருக்கு பலத்த ஆதரவு உள்ளதால் , அவர் போட்டியிடும் தொகுதியில் பெரும் வெற்றியை மகிந்த ஈட்டுவார் என்று கூறப்படுகிறது. இதனை சாட்டாக வைத்து பெருவாரியாக அவர் வென்றதால் அவரே பிரதமாரக வேண்டும் என்று ஐக்கிய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பின்னர் ஆரவாரப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
நடைபெறவுள்ள தேர்தலில் சிலவேளை , மகிந்தர் போட்டியிடும் சுதந்திரக் கட்சியே வெல்லும் என்ற நிலை தோன்றியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன் நிலையில் ரணிலுக்கு மேலும் நெருக்கடிகள் தோன்றியுள்ளது. ரணில் இந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் , மிகுந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
Geen opmerkingen:
Een reactie posten