தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 juli 2015

நள்ளிரவில் பொலிஸுக்கு சென்ற பெண்: உயர் நீதிமன்ற நீதியரசரின் கறுப்புப் பக்கம் ?

உயர் நீதிமன்றின் நீதியரசர் சரத் ஆப்றூ தனது வீட்டின் பணிப் பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் கல்கிஸ்சை பொலிஸார் , கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.
குறித்த பணிப் பெண், உயர் நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூ தன்னை தாக்கியதாகக் கூறி கடந்த 27 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதே தினத்தில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப் பெண் கடந்த 27 ஆம் திகதி நள்ளிரவு 12.15 மணியளவில் , கல்கிஸ்சை பொலிஸுக்கு வந்ததாகவும் , தன்னால் சந்தேகநபரின் கொடுமைகளை தாங்கிக்கொள்ளமுடியவில்லையென முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தான் கடந்த 15 ஆம் திகதி சந்தேகநபரான நீதியரசரின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததாகவும், அன்றைய தினத்திலிருந்து அவர் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் , தடுத்து வைத்தகாவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் புத்தி சுவாதீனமற்ற பிள்ளையொன்று இருப்பதாகவும் , அப்பிள்ளை தன்னை மோசமான முறையில் தாக்கியதாகவும் அதனை குறித்த நீதியரசர் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்ப தாகவும் அப் பெண் அளித்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குறித்த நீதியரசரும் தன்னை தொடர்ந்து தாக்கி வந்ததாகவும் , அவர் தனது பிஸ்டோலாலும் தன்னை தாக்கியதாகவும் இதனால் தலையில் பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அப் பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten