தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 juli 2015

இறுதிப்போரில் காணாமல் போனோர் விவரங்கள் செப்டம்பரில் வெளியிடப்படும்: அஜித் பெரேரா

பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும்: சர்வதேச தமிழர் பேரவை
[ செவ்வாய்க்கிழமை, 30 யூன் 2015, 05:09.09 PM GMT ]
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று சர்வதேச தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
தமது அமைப்பு விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், பேரவை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பேரவை அஹிம்சையை தடமாகக்கொண்டு செயற்படும் அமைப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது அமைப்பு, முதலாளித்துவ நாடுகளின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுகிறது என்பதை அவர் மறுத்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து சமூகங்களை போன்றே தமிழ் சமூகத்துக்கு இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பன உள்ளன என்று சுரேன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சர்வதேசத்திலுள்ள தமிழர்கள், இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் முக்கிய அமுக்கக்குழுவாக இருப்பர் எனினும் உள்நாட்டில் உள்ள மக்களே பிரதான அமுக்கத்தை அரசாங்கத்துக்கு வழங்க முடியும் என்றும் சுரேன் குறிப்பிட்டுள்ளார்.


இறுதிப்போரில் காணாமல் போனோர் விவரங்கள் செப்டம்பரில் வெளியிடப்படும்: அஜித் பெரேரா
[ புதன்கிழமை, 01 யூலை 2015, 12:57.04 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் இறுதிகட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலான விவரங்களை இலங்கை அரசு இரண்டு மாதங்களில் ஐநாவிடம் தெரிவிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
அப்போது அரசதரப்பில் அளிக்கப்படவுள்ள விளக்கங்களில் இவை இடம்பெறும் என அமைச்சர் அஜித் பெரேரா உறுதிப்படுத்தினார்.
அரசு அந்தப் பிரச்சினையை உணர்ந்துள்ளது, அதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என விரும்புகிறது என்றாலும் பல சிக்கல்கள் உள்ளதாலேயே அந்தத் தகவல்களை உடனடியாக அரசால் வெளியிட முடியாமல் உள்ளது.
காணாமல்போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கங்கள் நியாயமானவையே என்பதை இலங்கை அரசு முற்றாக அறிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் குறித்து மாறுபட்டத் தகவல்களும் உள்ளன என்று கூறும் அமைச்சர் அஜித் பெரேரா எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசு சில தகவல்களை வெளியிடும் என்றார்.
இது தொடர்பிலான விபரங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 250க்கும் குறைவான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே உள்ளனர் என்றும், அந்தப்பட்டியல் நீதி அமைச்சகத்திடம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTVSUeq0E.html

Geen opmerkingen:

Een reactie posten