[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 11:59.52 AM GMT ]
இந்திய ஊடகப் பேரவையின் தலைவராகவும் முன்னர் பதவி வகித்திருந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.
அவர், Satyam Bruyat என்ற தனது வலைத்தளத்தில், ராஜீவ் கொலையாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து நேற்று பதிவொன்றை இட்டுள்ளார்.
அவர் தனது பதிவில்,
“ராஜீவ்காந்தி கொலையாளிகள் 24 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டனர். அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
அதுபோல, ஹைதராபாத் சிறையில் உள்ள அப்புதல் காதர், திஹார் சிறையில் உள்ள தேவிந்தர் பால் சிங் புல்லர், யேரவாடா சிறையில் உள்ள சைபுநிஷா குவாசி, ஆகியோரையும் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும்.
இவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து ஏற்கனவே வேண்டுகோள் முன்வைத்துள்ளேன். நான் படுகொலையை நியாயப்படுத்தவில்லை.
ஆனால், சிறிலங்காவுக்கு இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு ராஜீவுக்கு என்ன வேலை இருந்தது?- அதன் காரணமாவே ஆயிரக்கணக்கான தமிழர்களும், 3000 எமது படைவீரர்களும் மரணமாகினர்.
இது தமிழர்கள் மத்தியில் ஒரு வலிமையான எதிர்ப்புணர்வை ஏற்படுத்தாமலா போகும்?
1984இல் தனது தாயின் படுகொலைக்குப் பின்னர், ராஜீவ்காந்தியின் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது ராஜீவ் கூறியது, அவரை ஒரு கிரிமினலாக காட்டியது. என குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் வருகை! அர்ஜூன, ஹிருனிக்கா அடுத்த நகர்வு குறித்து ஆராய்வு
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 12:36.43 PM GMT ]
கிடைத்துள்ள தகவல்களின்படி, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர ஆகியோர் தமது அடுத்த நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமை தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.
புலிகள் மீது குறை கூறுவது வம்பை விலைக்கு வாங்கும் செயல்: கருணாநிதி
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 01:27.19 PM GMT ] [ பி.பி.சி ]
தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இது தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த துணை மனுவில், அணையைத் தகர்க்கத் தீவிரவாதக் குழுக்கள் முயற்சிப்பதாக மத்திய உளவுத் துறை தகவல் அளித்திருப்பதாக தமிழக அரசு கூறியிருந்தது.
இந்த மனுவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இது தொடர்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம் என்றாலும், விடுதலைப் புலிகள் மீது குறைகூறி, அவர்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என கூறியுள்ளார்.
மேலும் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும் அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதைக் கண்டிப்பதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இது தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்று கூறியுள்ளார்.
இது போன்ற செயலில் ஈடுபடும் அமைப்பின் பெயரை தமிழக அரசால் வெளியிட முடியுமா என்றும் விஜயகாந்த் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTYSUes5J.html
Geen opmerkingen:
Een reactie posten