தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juli 2015

இது தான் மகிந்தவின் "தேசத்திற்கான மகுடம்" ஒரு வாரத்தில் 5,784 பேர் கைதாகியுள்ளார்கள் !


மகிந்தரின் ஆட்சிக் காலத்தில் அவரது சகாக்கள் பலர் போதைப் பொருள் , வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்துள்ளார்கள். அவர்கள் ஆட்சி மாறியும் தமது தொழிலை விட்டபாடாக இல்லை. சமீபத்தில் யாழில் 150 கிலோ எடைகொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது யாவரும் அறிந்ததே. மகிந்த ராஜபக்ஷ வீட்டுக்குச் சென்ற பின்னர் , இதுவரை இலங்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தையின் பெறுமதி மட்டும் 1000 கோடி ரூபாவைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இவை பெரும்பாலும் இந்தியா , பாக்கிஸ்தான் மற்றும் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க கடந்த ஒரு வாரத்தில் மட்டும் , இலங்கையில் சுமார் 5,784 பேர் கைதாகியுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 22 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 294 கிராம் ஹெரோயின், 698 கிலோ கஞ்சா மற்றும் 3 இலட்சத்து 41 ஆயிரம் லீற்றர் கசிப்புடன் 5,784 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு விடையம் மட்டும் நன்றாகப் புரிகிறது. மைத்திரி எப்பாடு பட்டாவது இந்த போதைப் பொருள் வியாபாரத்தை ஒழிக்கவேண்டும் என்று கங்கணங்கட்டி இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten