இலங்கை அரசியல்வாதிகள் பலருக்கு மண்டை தட்டியுள்ளது என்பது ஒரு புறம் இருக்க. சோபிததேரர் தற்போது விடுத்துள்ள அறிக்கை வினோதமாக உள்ளது. 2009ம் ஆண்டு இன அழிப்பு நடந்தவேளை மெளனமாக இருந்து பார்த்துக்கொண்டு இருந்த சோபித தேரர் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் , அவர் தமிழ் மற்றும் முஸ்லீம்களை பழிவாங்குவாராம்.
வென்றெடுத்த ஜனநாயகத்தை பாதுகாப்பதாக மைத்திரிபால சிறிசேன தனக்களித்த வாக்குறுதியை மறந்துவிடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மிக நீண்டகாலத்தின் பின்னர் அமைதியான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் இன மத முரண்பாடுகள் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய தேரர் மக்கள் அமைதியாக வாழ்வதாகவும் மகிந்த ராஜபக்சவின் அதிகார ஆசையினால் இதனை சீரழிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
கடந்த ஆறு மாதகால ஆட்சி யாருடைய தனிப்பட்ட நலன்களுக்குமான ஆட்சியல்ல என்று கூறிய சோபித தேரர் சிலர் மகிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்து சுகபோக ஆட்சி புரிய காத்திருப்பதாகவும் எச்சரித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten