தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juli 2015

மகிந்தவுக்கு எதிராக கொழும்பில் நடந்த பெரும் ஆர்பாட்டம் இதுதான் (புகைப்படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பில் போட்டியிட இடமளித்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் சில ஆர்ப்பாட்டங்கள் நேற்று மாலை இடம்பெற்றன. நேற்றுமாலை வெள்ளிக்கிழமை மகிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளித்தார் என்ற தகவல் வெளியாகிமையை அடுத்து இந்தப் போராட்டங்கள் பரவலாக கொழும்பில் இடம்பெற்றன. மைத்திரியின் வெற்றிக்கு பணியாற்றிய சில அமைப்புக்கள் கட்சிகள் இதில் பங்கெடுத்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த கட்சிகளின் எதிர்பபை மீறி இவ்வாறு இடமளிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மகிந்த போட்டியிடுவதை எதிர்த்தும் மகிந்தவுக்கு மைத்திரி இடமளித்ததை கண்டித்தும் கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கள், பெண்கள் அமைப்புக்கள் என நூற்றுக்கு மேற்ட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேவேளை நாடு முழுவதும் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை கொண்டு செல்ல இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten