[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 01:51.30 PM GMT ]
எனினும் அவரின் மனைவிக்கு கடந்த மே மாதத்தில் அமெரிக்க வீசா வழங்கப்பட்டது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் எந்த ஒரு நாட்டுக்கும் உதவப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மனைவியுடன் சேர்த்த நிலையிலேயே ஜெகத் ஜெயசூரியவின் கடவுச்சீட்டும் அமெரிக்க தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்னும் ஜெயசூரியவின் கடவுச்சீட்டு தூதரகத்தில் இருந்து திருப்பித்தரப்படவில்லை.
இறுதிப்போரின் பின்னர் ஜெகத் ஜெயசூரிய இலங்கையின் இராணுவ தளபதியாக பதவியேற்றார். பின்னர் தலைமையதிகாரியாக மாற்றம் பெற்றார்.
இந்தநிலையில் வீசா வழங்கப்படாமை குறித்து அமெரிக்க தூதரகத்திடம் இலங்கையின் செய்தித்தாள் ஒன்று வினவியபோது கொள்கையின் அடிப்படையில் தனிப்பட்டவர்களின் விடயங்கள் தொடர்பில் பதில் கூற முடியாது என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வகையில் எந்த நாட்டுக்கும் இலங்கை உதவாது!- மஹிந்த செவ்வி
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 03:17.22 PM GMT ]
இந்திய இணையத்தளம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்ச, பிரதமராக தெரிவுசெய்யப்படலாம் எனும் நிலைமையும் உள்ளது.
இந்தநிலையில் அவர் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு இணங்க தாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு அங்கீகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் தமக்கு மக்களின் ஆதரவு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமக்கும் சிறந்த உறவு உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரிந்து சென்று வாக்கு கேட்டபோதும் தற்போது இருவரும் இணையவேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் எண்ணுகின்றனர் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தின் கீழ் பிரதமருக்கும் அதிகாரங்கள் உள்ளன. இந்தநிலையில் பிரதமரானால் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படுவதில் தமக்கு பிரச்சினையிருக்காது.
தமிழ் மக்களை பொறுத்தவரை அவர்களை தாம் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்ததாக குறிப்பிட்ட ராஜபக்ச, அதனை உணர்ந்து தமிழர்கள் பெரும்பாலானோர் தமக்கு 2015 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களித்தனர்.
எனினும் சில தமிழ் தலைமைகளின் பிழையான வழிநடத்தலால் பெரும்பான்மை தமிழர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை.
முஸ்லிம் தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமது ஆட்சியில் வாய்ப்பை பயன்படுத்தி வாக்குகளை அதிகரித்துக்கொண்டனர்.
தமது அரசாங்கத்தின் அனுசரணையில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுவதாக அவர்கள் கதையை பரப்பினர்.
எனினும் இந்தத் தலைவர்கள் கூறியது பொய் என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளனர் என்று மஹிந்த கூறியுள்ளார்.
ஆசியாவின் வளர்ந்துவரும் சக்திமிக்க நாடுகளாக இந்தியாவும் சீனாவும் விளங்குகின்றன. இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாலமாக இலங்கை இருக்கும். மாறாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கு இலங்கை உதவாது என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten