[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 03:54.37 PM GMT ]
இன்று சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
அண்மையில் 70 பிறந்த நாளைக் கொண்டாடிய சந்திரிக்கா, பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகளின் ஓர் அம்சமாக இவ்வாறு முன்னேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளார்.
எவ்வாறெனினும், தற்போதைய அரசியல் சூழ்நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சந்திரிக்கா பதிலளிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கியதனை அனுமதிக்கின்றீர்களா? முன்னாள் ஜனாதிபதி ஒருவரான மஹிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் ஜனாதிபதி வரப்பிரசாதம் இழக்கப்படுமா? ஆகிய இரண்டு பிரதான கேள்விகளை கேட்டிருந்தனர்.
எனினும், இந்தக் கேள்விகள் இரண்டிற்கும் சந்திரிக்கா பதிலளிக்கவில்லை.
இந்த இடம் அரசியல் பேசுவதற்கு உகந்த இடமில்லை என சந்திரிக்கா பண்டாரநாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் சுசில் பிரேமஜயந்த மீது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சந்தேகம்
[ சனிக்கிழமை, 04 யூலை 2015, 03:35.50 PM GMT ]
தமது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இரகசிய கூட்டம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி படங்களின்படி பிரேமஜயந்தவின் வீட்டில் இருந்து முன்னர் அமைச்சர் பெசில் ராஜபக்ச உட்பட்டவர்கள் வெளியேறிச்செல்வது தெரிகிறது.
பசில் ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தவில்லை என்று பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனிப்பட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் தங்கியிருந்த சுசில் பிரேமஜயந்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை சந்தித்தமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என்று சுசில் பிரேமஜயந்தவே நேற்று அறிவித்ததன் பின்னரே இந்த சந்தேகத்தை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten