நேற்றைய தினம் தங்காலை வீரக்கெட்டிய மெதமுலனவில் நடைபெற்ற கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான தலைவர்கள் மஹிந்தவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில்ழ கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எந்தவொரு முக்கியமான தலைவரும் மெதமுலனவில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் மீள் பிரவேசத்தை குறிக்கும் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றிருக்கவில்லை.
குறிப்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்வு கூறப்பட்டிருந்தது. எனினும், இவர்களில் எவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை, இது மஹிந்த தரப்பிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் உண்மையில் ஒப்பீட்டளவில் குறைந்தளவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களே பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் சமால் ராஜபக்ஸ, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் லங்கா சமமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதேவேளை, எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகளின் ஒத்துழைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Geen opmerkingen:
Een reactie posten