தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 juli 2015

இலங்கை ஹட்லரின் தேசம் அல்ல: பிரதமராக விரும்புவோர் இருக்க வேண்டியது சிறையில் !


நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்படுமாயின் இன்று பிரதமர் பதவி கேட்கும் நபர்கள் சிறையில் இருப்பர் என முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் ஊழல், மோசடி, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இன்று சிறையில் இருக்க வேண்டிய நிலையில் மீண்டும் அதிகாரத்திற்கு வர துடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றம் இழைத்திருப்பின் அவர் நாட்டு மன்னராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனநாயக ரீதியில் மக்கள் சார்பில் நின்று மனிதாபிமான கட்சி என்று பெயர் எடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கறுப்பு கறைப் படிந்தது.
எனினும் ஜனவரி 8ம் திகதி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியை வீட்டுக்கு விரட்டியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பில் இன்று (01.07.15) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், ஜனவரி 8ம் திகதிக்கு பின் முக்கியமான நபர்கள் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றி புது சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளோம். முடிந்து போன சந்தர்ப்பத்தை மீண்டும் அழைத்து அழிவுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். நாம் சரியாக செயற்பட்டிருந்தால் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். சட்டம், நீதிமன்றம் சரியாக செயற்பட்டால், குற்றம் செய்தவர்கள் இன்று பிரதமர் பதவி கேட்பவர்கள் என பலர் சிறையில் இருப்பர். அப்படி செய்யாது ஐயோ பாவம் என்று அவர்களுக்கு அமைதியாக இருக்க இடமளித்துள்ளோம். அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியானவர்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுக்க நினைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்களை தூக்கி நிலத்தில் அடிப்பதற்கு ஒப்பாகும்.
எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் தவறு செய்தால் சிறை செல்ல வேண்டும். வீடு சென்று வாயை மூடிக் கொண்டு இருக்கவும் வேண்டும். அரசியல் தலைவர் ஒருவரிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு அது. அதைவிடுத்து தினமும் இதில் தொங்கிக் கொண்டு அட்டை போல இரத்தம் குடிப்பதற்கு அல்ல அரசியல் தலைமை இருக்கிறது. மக்களிடம் வாக்குகளில் தோற்றால் வீட்டில் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். மக்கள் அரசியல் என்பது அதுதான். இலங்கை ஹட்லர் தேசம் அல்ல. கொலை செய்து கொண்டு, ஊழல் செய்து கொண்டு இருக்க முடியாது. அதனால்தான் 9 வருட குறுகிய காலத்தில் மக்கள் அணிதிரண்டு வீட்டுக்கு விரட்டி அடித்தனர். பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு. அதற்கென மக்களுடன் சேர்ந்து எந்தவொரு போராட்டத்திற்கும் நாம் தயார். நாம் போராட்டத்தில் இறங்குவது பயம் என்ற ஒன்றை அருகில் வைத்துக் கொண்டு அல்ல. ஆனால் எம்மால் இதனை தனியா செய்ய முடியாது. இலங்கையை பெறுமதியான மக்கள் வாழும் நாடாக மாற்றி அமைக்க வேண்டும்.´
எமது உயிர்களிற்கு ஆபத்துள்ள போதிலும்,நாட்டிற்காக நாங்கள் எந்த மோதலிலும் ஈடுபடுவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டியது இந்த நாட்டு மக்களின் கடமை,எங்களது உயிர்களிற்கு ஆபத்துள்ள போதிலும் நாட்டின் நன்மைக்காக நாங்கள் எந்த மோதலிலும் ஈடுபடுவோம்... கடந்த தசாப்தத்தை தவிர வேறு ஓரு போதும் தனது அரசியல்நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வன்முறையை பயன்படுத்தியதில்லை. இலங்கையின் நீதித்துறை சரியான விதத்தில் செயற்பட்டிருந்தால், பிரதமர் பதவியை கோரும் சிலர் தற்போது சிறையிலிருந்திருப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten