தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juli 2015

அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 வீத இடம் – மகளிர் விவகார அமைச்சு
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 11:27.34 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் தமது வேட்புமனுக்களில் 30 வீதமான இடத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசிய பட்டியலில் மூன்றில் ஒரு வீதத்தை பெண்களுக்காக ஒதுக்குமாறும் அமைச்சு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 5.8 வீதம் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை 30 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மாத்திரமல்லாது, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகளிலும் பெண்களுக்கு 30 வீத இடம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 11:26.21 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவசர கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றியமைக்கவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து இந்த அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தமையை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் உள்ள மஹிந்த தரப்பினர் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten