தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

UN அமர்வுகளை இலக்கு வைத்து எம் மீது குற்றச்சாட்டுக்கள் அச்சப்படும் அரசும் இராணுவமும் !


UN அமர்வுகளை இலக்கு வைத்து எம் மீது குற்றச்சாட்டுக்கள் அச்சப்படும் அரசும் இராணுவமும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுளை இலக்கு வைத்து இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. குற்றம் சுமத்துவோர் ஆதாரங்களுடன் காவல்துறைத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சிகள் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.இலங்கை இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சிறிது காலத்தில் ஓய்ந்துவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உரிய ஆதாரங்கள் இன்றி விசாரணைகளை நடாத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் தரப்பினர் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதனை முதன்மை நோக்காகக் கொண்டு இவர்கள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். குற்ற விசாரணைப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten