இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஐ. நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் கோரிக்கையை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
நம்பகரமானதும், பக்கச்சார்பற்றதுமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அண்மைய அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் இன்னமும் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டுமென்பது தெளிவாகியுள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் யுத்த வலய மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதல்ல என அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
http://news.lankasri.com/show-RUmryCSaNXiu7.html
Geen opmerkingen:
Een reactie posten