தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 februari 2013

தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலரை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்த இரா. ஜனார்த்தனம் காலமானார் !


 [ பி.பி.சி ]
உலகளவில் தமிழர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவரும், குறிப்பிடத்தகுந்த தமிழ் ஆர்வலருமான டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தமிழுக்காக பல்வேறு தளங்களில் அவர் பணியாற்றி வந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் பங்கு பெற்ற அவர், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், போலீசாருக்கும் தமிழ் மக்களுக்கும் மோதல் ஏற்பட, அதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் இலங்கை தமிழர் போராட்ட வாலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலரை தமிழகத்துக்கு முதல் முறையாக அழைத்து வந்தவர் ஜனார்த்தனம் அவர்கள்தான் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

Geen opmerkingen:

Een reactie posten