தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கவில்லை! மறுக்கும் பிரித்தானிய அமைச்சர்


இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா, இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு சிறு ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் இரண்டு மில்லியன் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானிய சிறு ஆயுத ஏற்றுமதியாளர்கள், இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக பிரித்தானியா ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten