தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 februari 2013

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது ,சிங்கள- முஸ்லிம் பதற்றம் குறித்து அரசாங்கம் அறிக்கை!!


இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது
[ வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013, 12:43.37 AM GMT ]
எதிர்வரும் 22வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் வரைபை, தொழில்நுட்ப உதவி கருதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கை, எதிர்வரும் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றத்தின் பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சிங்கள- முஸ்லிம் பதற்றம் குறித்து அரசாங்கம் அறிக்கை
[ வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013, 12:49.02 AM GMT ]
இலங்கையில் சிங்கள- முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமய ரீதியான பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த அறிவிப்பு இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, தற்போது நாட்டில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் சமய ரீதியான பதற்றநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் பதில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இன்று அதற்கான பதில் வழங்கப்படும் என்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா அறிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten