அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அரசை தண்டிக்க ஐ.நா தவறியுள்ளது. ஆனால் இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. இதை ஐ.நா சரியாகப்பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக்கூடத்தில் இலங்கைக்கு எதிராக தீரடமானம் கொண்டுவரவுள்ள நிலையில் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உலகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதவேளை சனல் 4 தொலைக்காட்சி போர் தவிர்ப்பு வலயம் என்ற ஆவணத்தை இந்த கூட்டத்தை தொடரை முன்னிட்டு வெளியிடவுள்ளது. வரும் 27ம் திகதி, பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் காண்பிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
அத்துடன், வெள்ளைக் கொடியுடன் சென்று சரணடைந்த ப. நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரையும் இராணுவம் சுட்டுக்கொன்றதே, அதன் ஆதார வீடியோக்களும் உங்கள் கைகளில் இருக்கிறதா என்று அதிர்வின் நிருபர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு புன் சிரிப்புடன் பதிலளித்த காலம் மக் ரே அவர்கள், இது தொடர்பாகவும் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார். விரைவில் மேலும் பல ஆதாரங்கள் வெளியாகவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten