யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பத்திரிகை விநியோகப் பணியை முடக்கும் நோக்குடன் மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறியிருக்கின்றது.
தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் தாக்கப்பட்டு பத்திரிகைகள் அவரது மோட்டார் சைக்கிளோடு வைத்து நடுவீதியில் எரியூட்டப்பட்டிருக்கின்றது.
யாழ். பருத்தித்துறை விநியோக மார்க்கத்தில் புத்தூர் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
வழமைபோல குடாநாட்டிலுள்ள பத்திரிகைகள் விநியோகப் பணிகளுக்கான பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கோப்பாய் பகுதியில் வைத்து உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மறித்த போது நிற்காமல் ஓடிச்சென்ற வேளையில், தினக்குரல் பத்திரிகையின் பணியாளர் புத்தூர் பகுதியில் வழிமறிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகள் தீயிடப்பட்டிருக்கின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த தினக்குரல் பத்திரிகையின் பணியாளரான என் சிவகுமார் என்பவர் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள இராணுவ முகாமில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு-
யாழ்.மாவட்டத்தில் ஊடக அடக்குமுறையின் மற்றொரு பரிணாமமாக இன்று காலை யாழ்.தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்த்தர் ஒருவர் மீது படைப்புலனாய்வாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பத்திரிகைகளும், மோட்டார் சைக்கிளும் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 4 மணியளவில் புத்தூர் சந்தியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் தேசிய தமிழ்ப் பத்திரிகையான தினக்குரல் மிக இக்கட்டான காலகட்டத்திலும் கூட யாழ்.மாவட்டத்தில் ஊடகப்பணியாற்றிய ஒரு பத்திரிகை.
இந்நிலையில் அண்மைக்காலமாக இந்தப் பத்திரிகை மீது குறிவைத்த படைப்புலனாய்வாளர்கள் இன்று காலை விநியோகஸ்த்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சி.சிவகுமார் (வயது40) என்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் இந்தச் சம்பவத்தின்போது 4 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கம்பிகள், பொல்லுகளால் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தற்போது காயமடைந்த குடும்பஸ்த்தர் அச்சுவேலி வைத்தியசாலையிலிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊடகங்களின் வாயை மூடுவதற்கு அரசாங்கமும், படைப்புலனாய்வாளர்களும் கடும் பிரயத்தனம் எடுத்திருப்பதன் ஒரு பாகமே, அண்மையில் வடமராட்சியில் உதயன் பத்திரிகை விநியோகஸ்த்தர் தாக்கப்பட்ட சம்பவமும், தற்போது தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்த்தர் தாக்கப்பட்ட சம்பவமுமாகும்.
இந்த இரு பத்திரிகைகளும் அடக்கப்பட்டால், தேசிய நிலைப்பாட்டை மக்களுக்கு வேறு யாரும் கூற முடியாது என்ற நிலைப்பாட்டிலும் இராணுவ அத்துமீறல்களை யாரும் சுட்டிக்காட்டமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிலுமே இந்த தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு நேரில் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேரில் அனைத்தையும் பார்வையிட்டுள்ளார்.
பத்திரிகை விநியோதத்தர் மீதான தாக்குதல்! ஹத்துருசிங்கவே பெறுப்பை ஏற்கவேண்டும்! சரவணபவன் எம்.பி
[ வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013, 09:11.20 AM GMT ]
யாழிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் விநியோக பணியாளர் இன்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்று காலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த போதே சரவணபவன் இதனை தெரிவித்தார்
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக கங்கணங் கட்டிக் கொண்டு செயற்படுகிறது இதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றி விட்டு தற்போது ஊழியர்களை தாக்க தொடங்கிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
யாழில் அடாவடி அரசியல் நடத்திக்கோண்டிருக்கும் ஒரு கட்சி அவர்களுடைய பத்திரிகையை மக்களிடையே திணிப்பதற்காக தினக்குரல் பத்திரிகையை முடக்குவதற்காக இவ்வாறு விநியோக்கதர்கள் மீது தாக்குதலை நடாத்தியுள்ளனர் என சந்தேகிக்கக்கூடியதாக இருக்கின்றது எனவும் சரவணபவன் எம்பி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்......,
தமிழகத்தில் ஜனாதிபதி மகிந்தவின் உருவபொம்மை எரிப்பு: நாம் தமிழர் கட்சியினர் 25 பேர் கைது
[ வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013, 08:31.40 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாளை இந்தியாவிற்கு வருகை தருவதைக் கண்டித்து, வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மைய அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் படம், உருவ பொம்மைகளை எரித்தனர். இலங்கை தேசிய கொடியையும் எரித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 25 பேரை கைது செய்தனர்.
இதேவேளை,நாம் தமிழர் கட்சியின் மற்றொரு பிரிவினர் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கொடிகளுடன் வந்து திருப்பதி தேவஸ்தான தகவல் மைய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
அது மட்டுமன்றி, ஜனாதிபதி மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காட்பாடியில் சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று காலை கல்லூரி முன்பு உருவபொம்மையை எரித்தனர்.
பின்னர் சித்தூர் பஸ்நியைத்தில் வேலூர்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவிகள் உள்பட 70 பேர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்து வந்து மாணவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten