இலங்கை அரசாங்கம் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதிக்கட்ட போரில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனை, இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகள் சனல்-4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஜிந்தர் சச்சர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் இணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ராஜா,
மனித உரிமைப் பிரச்சினையை மீறியுள்ள இலங்கை மீது நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையக்கூட்டம் இந்தியாவிற்கு ஒரு சோதனையாக இருக்கும்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிகட்டப் போரில் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை மீது பன்னாட்டு விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.
பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்ட காட்சிகள், இலங்கை ராணுவத்தின் மனித உரிமை அத்துமீறல்களுக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இந்த இனப்படுகொலைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் பேசவேண்டும்.
குறிப்பாக இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்றுள்ளது. இதுவரை அங்கு நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கையில் தமிழர்கள் மீது நடந்துள்ள இனப்படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுகிறேன். இந்தியா இனியும் பொறுமை காக்காமல், இலங்கைக்கு எதிராக பேசவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை என்றால், அது ஒரு சாதூர்யமான தவறாகத்தான் இருக்கும் என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஜிந்தர் சச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை மீது விசாரணை நடத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை
[ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 07:51.18 AM GMT ]
இது தொடர்பில் மனித உரிமைக் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2012ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவை, மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்!- தெஹ்லான் பாகவி
[ புதன்கிழமை, 20 பெப்ரவரி 2013, 11:42.35 AM GMT ]
லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் என்ற பாலகனை இலங்கை இராணுவம் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இந்த செயல் மிக கொடூரமானது, மிருகத்தனமானது.
இந்த புகைப்படம் உண்மையானது என நிபுணர்களால் நிருபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறுதிப்போரில் இலங்கை செய்த போற்க்குற்றமும், மனித உரிமை மீறலும் மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசேவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை மிகவும் கடமைப்பட்ட இந்திய அரசு கொண்டு வர வேண்டும்.
நட்பு நாடு என்கிற பெயரில் இலங்கை செய்கிற அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்திய அரசு உடனே கைவிட வேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றிருப்பதை போல இலங்கையில் தமிழர்களின் பொது வாக்கெடுப்பின் மூலம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த இந்திய அரசும் சர்வேதேச சமூகமும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Geen opmerkingen:
Een reactie posten