தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 februari 2013

இன அழிப்புக்கு நிதி வழங்கும் அமைப்புகளை புறக்கணிக்கு கருத்தியல் அமர்வு !


பிரித்தானிய தமிழர் பேரவையூம் தமிழர் தோழமை இயக்கமும் இணைந்து கடந்த திங்கட்கிழமை இங்கிலாந்து குயின் மேரி பல்கலைகழகத்தில் சிறிலங்காவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டினையூம் தமிழ் தேசத்தின் இன அழிப்புக்கு நிதி வழங்கும் பல்தேசிய நிறுவனங்களையூம் நிராகரிக்கும் கருத்தரங்கு ஒன்றினை நடத்தின. 

இதன்போது மாணவர்கள்இ தமிழ் உணர்வாளர்கள்இ தொழிட்சங்கவாதிகள்இ இதர தமிழ் நிறுவனங்களை சேர்ந்தோர் இணைந்து பொதுநலவாய நாட்டு தலைவர்களையூம் போதுநலவாய நாட்டு வர்த்தக அமைப்புக்களையூம்இ சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு எதிராகவூம் தமிழ் தேசத்தில் நடைபெறும் இன அழிப்பிற்கு எதிராகவூம் குரல் கொடுத்தனர். இந்த கருத்தரங்கின் இரண்டாவது அமர்வின் போது சிறி லங்காவை நிராகரிக்கும் இந்த தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஊக்கமுள்ள இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்க வாதிகள்இ தமிழர் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அனைத்து பிரதிநிதிகளும் ஏனைய பங்காளர்களும் சிறி லங்காவில் தற்போது நடைபெற்றுவரும் அட்டூழியங்கள் பற்றி விபரித்ததுடன சுதந்திரம் பெற்ற 1948 இல் இருந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வரும் இன அழிப்பு பற்றி குறிப்பிட்டனர.

தமிழர் தோழமை அமைப்பின் இணைப்பாளர் திரு சேனன் அவர்கள் பிரித்தானிய அரசிடம் இருந்து உள்நாட்டு புத்திஜீவிகளிடம் நாட்டின் இறைமை மாற்றப்பட்டதிலிருந்து எதுவித பயனும் பெறவில்லை என்பதனை சுட்டிக்காடினார். சுதந்திரம் என்பது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தில் தனித்துவமான மொழிஇ பண்பாடுஇ பழக்கவழக்கங்கள்இ என்பவற்றை பாரம்பரியமாக கொண்ட வரையறையூடனேயே அடையாளம் காணப்படும். தமிழகள் வடக்கு கிழக்கில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருவதுடன் தங்களது சுய இருப்புக்கும் சுதந்திரத்துக்கும் தொடர்ந்து போராடி வருகின்றன என்றார். பிரித்தானிய தமிழ் பேரவையின் இணைப்பாளர் திரு வாகீசன் அவர்கள் விளக்கமளிக்கையில் முன்னெடுக்கப்படும் பிரச்சார முயற்சிக்கான திட்ட வரைபு ஒன்றை சமர்ப்பித்ததுடன்இ சிறி லங்கா அரசையூம் பல் தேசிய நிறுவனங்களையூம் நிராகரிப்பதற்கும் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் போர் முடிந்த காலம் முதல் இருந்து வரும் சர்வாதிகார ஆட்சிக்கு உதவி செய்து வருபவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியூறுத்தினார்.

மேலும் அவர் தற்போது உள்ள ஆட்சி அதிகாரம் உண்மையான முரண்பாட்டிற்கும் அதன் அடிப்படைக் காரணத்திற்கும் அர்த்தமுள்ள இணக்கப்பாடிற்கும் வழிகாணும் வகையில் ஓர் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்றினை போர் குற்றங்கள்இ மனிதத்திற்கெதிரான குற்ற நடவடிக்கைகள் இன அழிப்பு முயற்சிகள் என்பவற்றினை தடுக்க உதவூவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். தொழிற்சங்கங்கள்இ மாணவர் அமைப்புக்கள் என்பனஇ பிரித்தானிய தமிழர் பேரவையூடனும் தமிழர் தோழமை அமைப்புடனும் இணைந்து “சிறீலங்காவை புறக்கணிப்போம்” என்ற குரலுடன் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு எதிராகவூம்இ 2013 இற்கு பின்னும் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படவூம் முன்வந்தனர். பின்வரும் செயல் திட்டம் முன்மொழியப்பட்டது.

1. 2013 பொதுநலவாய மாநாட்டில் சிறீலங்காவில் இயங்கும் பல் தேசிய முதலீட்டு நிறுவனக்கள் பங்குகொள்வதை புறக்கணிக்கச் செய்தல்.

2. சிறீலங்கா அரசினால் வரவேற்கப்படும் இரத்த கறையூடனான உல்லாச பயண துறையையூம் ஏனைய சேவைகளையூம் புறக்கணித்தல்.

3. பொதுநலவாய வர்த்தக சபைக்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்தல். 

4. 2013 பொதுநலவாய மாநாட்டு தலைவர்களுக்கு இம்மாநாட்டை புறக்கணிக்கவூம்இ மாநாட்டு இடத்தினையூம் மாற்றுவதற்கு தொடர்ச்சியான அரசியல் அழுத்தத்தினை மாநாட்டு அமைச்சர்கள் செயற்குழுவூக்கு விதந்துரைத்தல்.

தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் திரு Rob Williams National Shop Steward Network , Tracy Edwards, PCS Civil Service Union ஆகியோர் தமது கருத்துகளை தெரிவிக்கையில்இ பிரித்தானிய தமிழர்கள் எவ்வாறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட முடியூம் என்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தலில் தமது அனுபவங்களை விளக்கினர். " Youth Fight For Jobs "ஐ சேர்ந்த திரு போல் கல்லனான் என்பவர் எவ்வாறு மாணவர்களும் தமிழ் இளைஞர்களும் இப் புறக்கணித்தற் பிரச்சாரத்தை பலப்படுத்த முடியூம் என்பதை விபரித்தார்

சிறீலங்காயில் நீதிக்காகவூம் சுதந்திரத்திற்காகவூம் போராடும் தமிழர் முயற்சிகளுக்கு அவசியப்படும் கூடுதல் உதவிகளுக்காகஇ பிரித்தானிய தமிழர் பேரவையூம்இ தமிழர் தோழமை அமைப்பும் இணைந்து செயற்பட திடசங்கற்பம் பூண்டுள்ளன பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய நிறுவனக்களுடனும் அரசியல் சக்திகளுடனும் தமது விரிவூபடுத்திய நடவடிக்கையில் தொடந்தும் செயற்படும்.


















Geen opmerkingen:

Een reactie posten