தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 11 februari 2013

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இந்தியா சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை: ஜி.கே.வாசன்


முன்னாள் மேஜர் எம்.ராதாகிருஷ்ணபிள்ளை நூற்றாண்டு விழா பெரியார் திடலில் இன்று நடைபெற்றது. ஏ.என்.ராதாகிருஷ்ணன் இதில் தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்கு வந்த மத்திய மந்திரி ஜே.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தது யாதெனில்,
இரு நாள் இந்தியப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை.
திருப்பதி வந்தது அவரது சொந்த பயணம். தமிழக மக்கள் உணர்வைப் புரிந்து பயணத்தை அவர் ரத்து செய்திருக்க வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அமைச்சர் நாராயணசுவாமியிடம், மகிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற பலத்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்துக் கேட்டபோது அவர் கருத்தளிக்க மறுத்துவிட்டார்.
ஆனாலும், இலங்கை அரசோடு மத்திய அரசு வைத்திருக்கும் உறவைத் துண்டித்தால், இந்தியா பேசுவதை நிறுத்திவிட்டால், இலங்கைக்கு எதிராக முடிவெடுத்தால்,  ஈழத் தமிழர்களுக்காக யார் குரல் கொடுப்பது என நாராயணசுவாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், தலைவர்கள் குரல்கொடுத்தால் கேட்பார்களா? எனவே மத்திய அரசு ரீதியாக தான் பேச முடியும் எனவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten