தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 juli 2015

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை! சோபித்த தேரரிடம் கூறிய ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததாக கூறி சுசில் பிரேம ஜயந்தவினால் சந்தேகிக்கும் வகையில் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரரை ஜனாதிபதி நேற்று மாலை அழைத்த வேளையில் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டதை நிராகரித்துள்ளார்.
சோபித்த தேரர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டதற்கமைய நேற்று மாலை ஜனாதிபதி சோபித்த தேரரை அழைத்திருந்தார்.
அவரை சந்திக்கும் வரையில் சந்தேகிக்கும் வகையில் ஊடகங்கள் ஊடாக வெளியாகிய அறிக்கை தொடர்பில், மனமுடைந்திருந்த சோபித்த தேரர், “ இனி உங்களை சந்திப்பதில் அவசியம் இல்லை, நீங்கள் எனக்கு அறிவிக்காமல் உங்களுக்கு விரும்பியதனையே செய்தீர்கள்” என கூறி ஜனாதிபதியின் அழைப்பினை சோபித்த தேரர் நிராகரித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து காரணங்களுக்கும் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை எனவும் உண்மையில் அது சுசிலின் வேலையா என நான் தேடி பார்க்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெயரில் அறிக்கை வெளியாகியதற்கு முதல் நாள் கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென உறுதியாக குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்று காலை வாசு தேவ நாணயக்கார, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழப்படாமை உறுதி என ஊடகத்திடம் அறிவித்திருந்தார்.
எனினும் நேற்று காலை ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டணயின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான அறிக்கை ஒன்று ஊடகத்தில் வெளியாகிய நிலையில் நேற்று மஹிந்த தரப்பில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் குணவர்தன குறித்த ஊடக அறிக்கையை வாசித்துள்ளார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. சுசில் பிரேம ஜயந்த இது தொடர்பில் எவ்வித நிராகரிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இதற்கிடையில் இந்த ஊடக அறிகை முற்றிலும் போலியானதென ஜனாதிபதி ஊடக பிரிவு உத்தியோக பூர்வமாக நிராகரிப்பதற்கு அவசியமான நேரம் இருந்த போதும் இதுவரையில் அவ்வாறு மேற்கொள்ளவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten