ஐக்கிய நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளியானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை பயன்படுத்தி தனது செல்வாக்கை அதிகரிக்கலாம் என்பதால் அதனை தடுப்பதற்காகவே ஆகஸ்டில் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவித்ததாக 'ராய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ராஜபக்ச 2009ல் விடுதலைப் புலிகளை தோற்கடித்ததை தொடர்ந்து அவர் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றார். அவருக்கு இன்னமும் அந்த ஆதரவு காணப்படுகின்றது.
ஜுலை முதலாம் திகதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த அவரது அறிவிப்பை செவிமடுக்க பலர் அவரது சொந்த ஊரில் அணிதிரண்டிருந்தனர். அவர் பிரபலமானவர் மற்றும் திறமையாக பிரச்சாரத்தை முன்னெடுக்க கூடியவர் என்கிறார் கொழும்பை சேர்ந்த ஆய்வாளர் குசால் பெரேரா.
ஐக்கிய நாடுகளின் யுத்த குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பரில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் ஆகஸ்டிலேயே கசியலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரித்துள்ளன.
விசாரணை அறிக்கை முன்கூட்டியே வெளியாகலாம் என்பதை கருத்தில் கொண்டே சிறிசேன ஆகஸ்ட் 17ல் தேர்தலை நடத்த திட்டமிட்டார் என தெரிவித்துள்ள அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தவும், மஹிந்த ராஜபக்சவின் மீள்வருகையை தடுக்கவும் அவர் விரும்பினார் என தெரிவித்துள்ளன.
எவரும் இது குறித்து பகிரங்கமாக தெரிவிக்காத போதிலும் ஐக்கிய நாடுகள் அறிக்கையே தேர்தல் நடைபெறும் காலத்தை தீர்மானித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட அறிக்கை மஹிந்த ராஜபக்சவை பலப்படுத்தும் என அஞ்சிய மேற்குலக நாடுகள் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு கோரியதாக கொழும்பின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்தது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்தும் காப்பாற்றியது.
இலங்கை தொடர்ந்தும் இந்தியாவுடனான உறவுகளை சீர்செய்யுமா அல்லது ராஜபக்சவின் கீழ் சீனாவுடன் உறவுகளை நெருக்கமாக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்,
ராஜபக்ச அடுத்த அரசாங்கத்தை அமைத்தால் அவர் இடைநிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிப்பார் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்தார். என தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten