மறைந்த பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபன் சற்று முன்னர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் சற்று முன்னர் அவரை வெள்ளை வானில் வந்தவர்கள் இழுத்து ஏற்றி கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் யாழ்ப்பாணத்தில் இன்று அச்சமும் பரபரப்பும் நிலவுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
கடத்தப்படவில்லை, கைது செய்யப்பட்டார் என்கிறது பொலிஸ்
யாழ்.குடாநாட்டில் வெள்ளை வான் கடத்தல் நடைபெறவில்லை, ஆசிரியர் வரதராஐனின் மகன் பொலிஸாரினால் சட்டரீதியாக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
வரதராஐன் பார்த்தீபன் என்ற இளைஞர் யாழ்.நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து கடத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உன்மையில்லை.
குறித்த இளைஞர் யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர அவர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்படவில்லை என்கிறது பொலிஸ்.
Geen opmerkingen:
Een reactie posten