மகளின் மரணத்திற்கு நட்டஈடு வழங்குமாறு கோரி இலங்கை அகதி ஒருவர் இந்திய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அகதி முகாமில் தங்கியிருந்த 11 வயதான தனது மகள் உயிரிழந்தாகவும், இதற்கு அரசாங்கம் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
பத்து லட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக முகாம்களில் வாழ்ந்து வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளின்றி நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமின் அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளினால் மகளின் மரணம் சம்பவித்தது என குறித்த இலங்கை அகதி குற்றம் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten