கத்திக் குத்திற்கு இலக்கான மாணவர் முகத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
குறித்த பாடசாலையில் க.போ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கும் தரம் 10 இல் கல்வி பயிலும் மற்றுமொரு மாணவருக்கும் இடையில் கிரிக்கட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு பிணக்குக் காரணமாக மிக நீண்ட நாட்களாக இருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டு வந்து. இம் முறுகல் நிலை காரணமாக தரம் 10 கல்வி பயிலும் மாணவர் கா.போ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றும் மாணவனை தனது நண்பர்களின் உதவியுடன் சென்று அச்சுறுத்தியுள்ளார். இதன் பின்னர் நேற்று முன்தினம் அச்சுறுத்தப்பட்ட க.போ.த சாதாரண தர மாணவன் சக மாணவன் ஒருவருடன் பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயம் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவரிடம் நியாயம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது 10 தரத்தில் கல்வி பயிலும் மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னிடம் நியாயம் கேட்க வந்தவர்களை தாக்கியுள்ளார். இச் சம்பவத்தில் ஒரு மாணவன் முகத்தில் கயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த பாடசாலை நிர்வானத்தினர் சம்மந்தப்ட்ட மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து நடந்தவற்றை தெரியப்படுத்தியதுடன், இரு மாணவர்களையும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பத்திகாரி எவ்.யூ.வூட்லர் கத்திக் குத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டார். இதன் பின்னர் இரு மாணவர்களுக்கு இடையிலும் சமாதனம் செய்யப்பட்டு குறித்த பிணக்கினை தீர்த்தும் வைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
யாழில் விசேட பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம்
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வன்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரின் ஏற்பாட்டில் பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவையொன்று யாழில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்து மகளீர் கல்லாரியில் பாடசாலை அதிபர் விமலநாதன் விமலாதேவி தலைமையில், பாடசாலைக்கு முன்னால் புதிதாகப் பொறுப்பேற்ற யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.வூட்லரினால் இந்தச் சேவையை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழில் அதிகரித்த மது பாவனை மற்றும் போதைப் பொருள் பாவனை என்பவற்றினால் சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் குற்றங்களும் இதனாலேயே அதிகரிப்பதாக பல தரப்பினர்களும் நேரடியாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல தரப்பினர்களும் பல்வேறு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரம் பொலிஸாரும் பல அதிரடி நடவடிக்கைகளை இங்கு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய யாழிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு யாழ் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று தற்போது விசேட சைக்கிள் ரோந்து சேவையையும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
குறித்த சேவையினூடாக குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன், போதைப் பொருட்களின் விற்பனை மற்றும்; பாவனை மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்கும்.
மேலும் வீதிகளில் செல்லும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்பவர்கள் தொடர்பில் அவர்களைக் கண்காணிக்கும் வகையில் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்தச் சேவையானது பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பல வழிகளிலும் பயனுள்ளதாகவே அமையும். அவர்களின் நலன்கருதியே பொலிஸார் இந்தச் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுதுதல், மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாமை, வேறு வெறு பிரச்சனைகள் ஏற்படாமல் கல்வியை; தொடர்வதற்கும் வழி வகுக்கும் என்றும் இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten