புலம்பெயர் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாடு திரும்புகின்றனர்: கல்விப் பணிப்பாளர்
[ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2015, 08:31.14 AM GMT ]
தமிழர்கள் நாடு கடந்து செல்லும் போது அறிவு மட்டும் தங்களைப் பாதுகாக்கும என்ற நம்பிக்கையுடன் சென்றார்கள். அவர்களது நம்பிக்கையும் வீண்போகவில்லை என்றும் கூறினார்.
மட்டக்களப்பு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“எமது நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழல் நிலையின் காரணமாக வட மாகாணத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் நாட்டின் நாலாதிசைகளிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்தார்கள்.
வடக்கிலிருந்து வெளியேறிய தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளானார்கள். அவர்கள் அகதி அந்தஸ்தோடு உலகம் முழுவதும் வியாபித்தார்கள்.
வடக்கிலிருந்து வெளியேறிய தமிழர்கள் நாடு கடந்து செல்லும் போது அறிவு மட்டும் தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றார்கள். அவர்களது நம்பிக்கையும் வீண்போகவில்லை. புலம்பெயர்ந்து சென்ற தேசத்தில் எல்லாம் அறிவைத் தேடினார்கள் அந்த தேடலின் விழைவாக மிகச் சிறந்த புத்திஜீவிகளாக மாறியுள்ளார்கள்.
நாடு கடந்து வாழும் தமிழர்கள் அறிவு யுத்தம் செய்யும் விற்பன்னர்களாக நாட்டுக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தற்போழுது உலகம் முழுவதும் வியாபித்துள்ள தமிழர்களின் அறிவுப் பல தந்திரோபாயத்தில் உலகம் சிக்குண்டிருக்கிறது. அதனால் புலம்பெயர் தமிழர்களது வாழ்க்கை, திட்டமிடல், எதிர்காலம் எல்லாமே ஒரு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலைகள், இருப்புக்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை அறிவார்ந்த முஸ்லிம்கள் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள் என்றால் அதற்கான பதில் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் முஸ்லிம் சமுதாயம் ஒட்டுமொத்தமாக மனித குலத்திற்கு கல்விப் புரட்சியை ஏற்படுத்துகின்ற ஒரு சமுதாயமாக மாற வேண்டும்” என்றார்.
மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம்! விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை! மாவை சேனாதிராசா
[ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2015, 09:22.12 AM GMT ]
இன்றைய தினம் காலை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முதலமைச்சர் கூறியதாக சில செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து இணைய ஊடகங்களிலும், இந்த நிதி பெற்றுக் கொண்டதான செய்தி வெளியாகியிருந்தது.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகளே. அவர்கள் மக்களுடைய நலன்களை கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்காக நிதியை கேட்டிருக்கிறார்கள். நானும் கூட 2.5 மில்லியன் ரூபா நிதியை கேட்டிருக்கிறேன்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சட்டைப் பைக்குள் வைப்பதற்கான நிதி கிடையாது. அது மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஊடாக பயன்படுத்தப்படும் நிதியாகும். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்று விட்டார்கள் என விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை.
இந்நிலையில் விடயம் தொடர்பாக முதலமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெளிவுபடுத்தலுக்காக கடந்த 11ம் திகதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு முதலமைச்சர் நேறறைய தினம் பதில் கடிதம் எழுதியிருக்கின்றார்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, நானும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியிருக்கின்றோம். அதில் முக்கியமாக சில விடயங்களை நாங்கள் பேசியிருப்பதுடன், சில தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருக்கின்றோம்.
மேலும் இதனால் கூட்டமைப்பின் ஒற்றுமை பாதிக்கப்படாது. நாம் மேலும் ஒற்றுமையாக செயறப்படுவோம் என்பதை முதலமைச்சரும், நாங்களும் தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை இன்றைய சந்திப்பில் நாங்கள் குறிப்பிட்ட விடயம். நிதி அமைச்சரால் 2015ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட அறிவிப்பில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட வரவுசெலவுத்திட்ட அபிவிருத்தி நிதி 10மில்லியன் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டுப் பின் அந்நிதி வழங்கப்படவில்லை.
மொத்தமான வடக்கு கிழக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் 13கோடி(1300லட்சம்) ரூபாய் கொடுக்கப்படவில்லை. என்பதை அறிந்திருக்கவேண்டும்.
இது தொடர்பில் பின்வருவனவற்றை தங்கள் கவனத்திற்கு தருகிறேன். (01) 2015 ஏப்ரல் மாதம் பிரதமருடன் சம்மந்தன் தலைமையில் அரலி மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இதனை கருத்தில் கொண்டு பனம்பொருள் சபை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலில் அச்சபை மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வருவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. மாகாணசபைக்குள் அந்த விடயம் வரவில்லை. உடன் மீள்குடியேற்ற அமைச்சுக்காவது மீண்டும் மாற்றவேண்டும் என கேட்டிருந்தோம்.
முதலில் அச்சபை மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் வருவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. மாகாணசபைக்குள் அந்த விடயம் வரவில்லை. உடன் மீள்குடியேற்ற அமைச்சுக்காவது மீண்டும் மாற்றவேண்டும் என கேட்டிருந்தோம்.
எமது சமூகத்தில் சமூகரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருக்கும் மக்களில் திக்கம் வடிசாலையை செயற்படுத்த முடியாமல் எம்மிடம் நிதி கேட்கிறார்கள். என்ற போது தேவையான 2.5மில்லியன் ரூபாவை (25 லட்சம் ரூபா) நிதியமைச்சிலிருந்து ஒதுக்கலாம் என பிரதமர் கூறினார்.
அந்த நிதியை கூட அமைச்சர் றிஷாட் முடக்கிக் கொண்டார். அந்த நிதியை தவிர வேறு எந்த நிதியும் அப்போது எம்மால் கோரப்படவில்லை. அந்த நிதி பனை அபிவிருத்தி சபைக்கு ஊடாக, அந்தச் சங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். அந்தச் சபையின் தலைவர் மற்றும் பெரும்பாலான இயக்குனர்கள் எம்மால் நியமகிக்கப்பட்டவர்களே.
பனம்பொருள் சபை மாகாணசபைக்கு வரவேண்டும் என்றும் நாம் வாதாடியிருக்கின்றோம். தற்போதும் அந்த விடயம் மாகாணசபைக்கு உரியதல்ல. மீள்குடியேற்ற அமைச்சே உப்பள விடயத்தையும் கையாளுகிறது.
(02) இரண்டாவதாக மீள்குடியேற்ற அமைச்சு வலி,வடக்கு, வளலாய், சம்பூர் பிரதேசங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு அமைச்சிடம் நிதி போதாமலிருப்பதாக யாழ்.செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அந்த அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
அதன் பின் அரசாங்க அதிபரிடமும் மீள்குடியேற்ற அமைச்சு செயலாளாரிடமும் பெற்ற நிதி மதிப்பீட்டையாவது, வழங்கவேண்டும் என நானும் சுமந்திரனும் பிரதமரிடம் நாடாளுமன்ற கட்டத்தில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த விடயமும் மீள்குடியேற்ற அமைச்சுதான் தற்போதும் கையாளுகின்றது. மீள்குடியேற்றத்திற்கு போதிய நிதி கோருவது எமது கடமையாகும்.
(03) அடுத்ததாக காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானத்தள அபிவிருத்தி தொடர்பாக, சென்ற ஆட்சிக் காலத்திலேயே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவிடமும் பின்னர் தற்போது முன்மொழியப்பட்ட விடயம் என்னவெனில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமானத்தள அபிவிருத்திக்கு மக்களின் நிலத்தை அபகரிக்காமல் வடக்கே கடலின் பக்கமாக அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதுதான்.
சென்ற மாதம் விமானத்தள அபிவிருத்தி பற்றிய திட்டவரைபு கடல்பக்கமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஆவணம் அரசாங்கத்தினால் என்னிடம் தரப்பட்டுள்ளது. அந்த விடயம் மத்திய அரசுக்குரியது அதற்குரிய பாரிய நிதியை சர்வதேச நாடுகளிடம் கோருவது பொறுப்புடையதாகும்.
இதுபற்றி இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடமும் இந்தியாவிலும், இலங்கையிலும் பேசியிருக்கின்றோம். துறைமுகம் ஆழப்படுத்தல் விமான ஓடுபாதை திருத்துதல் என்பன அப்போது இந்தியாதான் பொறுப்பேற்றிருந்தது.
(04) காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பற்றியும் இந்தியாவில் உள்ள அகதிகளை இலங்கைக்கு அழைப்பது மற்றும் மீனவர் பிரச்சினை பற்றியும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடமும் இந்திய பிரதமர் மோடியுடனும் பேசியிருக்கின்றோம். இவை யாவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் அத்தியாவசிய கடமைகளாகும்.
மேற்குறிப்பிட்ட வகைகள் சில உதாரணங்களாகும். ஆனால் இணைத்தளங்களில் எனக்கு 26 மில்லியன் தெற்கில் வைத்து தரப்பட்டதாக கூறும் செய்தி எனது 50 வருட அரசியல் வாழக்கையை களங்கப்படுத்தியிருப்பதையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இச்செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாம் எந்த அரசிடமிருந்தும். அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதம் பணத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதை அறுதியிட்டு கூறுவேன். இது மிகவும் பொய்யான ஒரு செய்தி. ஒரு பொய் செய்தியை வெளியிட்டுவிட்டு பின் பக்கம் பக்கமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சோரம் போய்விட்டார்கள் என வெளியிடுவார்கள்.
இச்செய்திகள் விமர்சனங்கள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பை சீர்குலைப்பனவாகும். விரைவில் ஒரு பொதுத்தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இத்தகைய செய்திகள் மற்றும் விமர்சனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பெரிதும், பாதிக்கும் என்றே கவலையடைகின்றோம்.
ஏதோ தெற்கிற்கு அழைத்து எங்கள் சட்டைப்பைக்குள் பாரிய நிதியை வைத்துவிட்டதைப் போல பல செய்திகள் வருகின்றன. இதுபற்றி நாம் பதில் கூறும் பொறுப்புடையவர்கள். நம் எல்லோருக்கும் ஒரு கூட்டுப்பொறுப்பு உள்ளது என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இதன் பொருட்டு எதிர்வரும் நாட்கள், இம்மாதம் 27 அல்லது 28ம் திகதி யாழ்ப்பாணத்தில் அல்லது வவுனியாவில் மாகாணசபை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் அடங்கிய ஒரு இணைப்பு குழு கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என எண்ணியிருக்கின்றேன்.
இரா.சம்பந்தனிடத்திலும் இதுபற்றி தெரிவித்துள்ளேன். இத்தகைய முரண்பாடுகள் இனிமேல் எழாமல் இருக்கவேண்டும். ஒரு பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டு உழைப்போம் என நம்புகின்றேன். என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSdSUfs4C.html
Geen opmerkingen:
Een reactie posten