தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juni 2015

தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வே சிவகுமாரனின் கனவாக அமைந்திருந்தது: சத்தியசீலன் !



மாணவப் பருவம் முதலே சமூகம் சார்ந்த நற்சிந்தனையுள்ளவராக இருந்த பொன் சிவகுமாரன் சமூக மட்டத்தில் இருந்த பாகுபாடுகளை நீக்குவதற்காக சிறுவயது முதலே போராடத் தொடங்கினார்.
தமிழ் மக்களுக்கெதிராக ஆளும் அரசுகள் மேற்கொண்ட அடக்கு முறைக்கெதிரான ஆயுத வழி அரசியல் முன்னெடுப்பைப் பற்றி சிந்தித்தார்.
1970 ஜீலை 19ம் நாள் உரும்பிராய் பாடசாலைக்கு வருகை தந்திருந்த சிறிலங்காவின் கலாசாரத்துறை துணை அமைச்சர் சோமவீர சந்திர சிறியின் வாகனத்திற்கு குண்டைவெடிக்க வைத்து ஆயுதப்போரட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போராட்ட நடவடிக்கைகளில் பலவற்றில் ஈடுபட்ட சிவகுமாரன் 1974 ஜீன் 05ம் நாள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பதற்காக சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்து தமிழ் இனத்தின் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். தமிழ் மக்களின் சுதந்திரவாழ்வுக்கான போராட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் மக்களின் சுதந்திர தேசம் அமைக்கப்படும் போதே சிவகுமாரனின் கனவு நனவாகும் என்றார்.
கடந்த 14ம் திகதி பிரான்ஸ் பாரிஸ் நகரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இடமொன்றில் நடைபெற்ற தியாகி பொன்.சிவகுமாரனின் வரலாற்றை பதிவு செய்துள்ள 'வரலாற்று நாயகன்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு திரு.மகேந்திரம் தலைமையில் நடைபெற்றது.
பொன்.சிவகுமாரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரியின் மகளான திருமதி.தாட்சாயினி மலர் தூவி ஈகச்சுடரையேற்றி வைத்ததை தொடர்ந்து நிகழ்வில் பங்கு கொண்டவர்களினால் மலர் வணக்கம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தாயக விடுதலைபோரில் இறந்த அனைத்து போராளிகள், பொதுமக்களுக்குமென அகவணக்கம் நடத்தப்பட்டது. இதன்பின்னர் திரு.சத்தியசீலன் அவர்களால் நூல் வெளியிடப்பட்டது.
சிறப்புப் பிரதிகளை திரு.மோகன், திரு.ச.வே.கிருபாகரன் உட்பட பலதமிழ் உணர்வாளர்கள் பெற்றுக்கொண்டனர். அத்துடன் நினைவுரைகளை திருமதி.புஸ்பராணி, திரு.தயாளன், திரு.சா.வே.கிருபாகரன், திரு.நித்தியானந்தன், திரு.ஆனந்தன்(அளவெட்டி ஆனந்தன்) ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள். திருமதி தயாளன் அவர்களினால் பொன்.சிவகுமாரன் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. நூலுக்கானமதிப்பீட்டுரையை எழுத்தாளரும் தமிழ் உணர்வாளருமான அரியம் ஆசிரியர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய திரு.சத்தியசீலன் அவர்கள் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாண மேயராக இருந்த துரையப்பா தமிழ் மாணவ சமுதாயத்தை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாலும், தமிழ் பெண்களை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் பாலியல் தேவைகளுக்குட்படுத்தும் இழிவான செயல்களில் ஈடுபட்டதனாலுமே பொன்.சிவகுமாரனிலால் அவர் இலக்கு வைக்கப்பட்டு கொலை முயற்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பலர் கருத்து தெரிவிக்கையில் தற்போது திட்டமிட்ட முறையில் தமிழ் இளம்சமுதாயம் சீரழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமானால் பொன்.சிவகுமாரனின் சிந்தனைகளை தமிழ் சமுதாயம் உளமறிந்து செயற்படவேண்டுமென தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq4I.html

Geen opmerkingen:

Een reactie posten