[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 09:42.17 AM GMT ]
நாட்டின் நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமும், தீவிர கண்காணிப்பும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உள்ளது என ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தவறான பிரச்சாரங்கள் செய்வதனை தவிர்க்குமாறு அவர் அங்கு சகல ஊடகங்களிடமும் கேட்டுக்கொண்டார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் தகவல்களை வழங்கும் சந்தர்ப்பத்தில் ஏனைய காரணங்களை காட்டிலும் ஊடகங்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை: ரவிநாத் ஆரியசிங்க
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 10:11.01 AM GMT ]
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடானது ஒரு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்போர் நாட்டில் இருந்து செல்வதற்கான ஆயத்தங்களை செய்யும் காலக்கட்டத்தில் ஒரு குறுகிய காலத்துக்கே தடுத்து வைக்கப்படுகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குடியேறிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிரான்ஸிஸ் க்ரீபே அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கையிலேயே ரவிநாத் ஆரியசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் தமது குற்றச்சாட்டில் இலங்கையில் வீசா ஒழுங்கு மீறல் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைக்கு உள்ளாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் பிரச்சினை, குற்றமாக கருதப்படாது எனவும், அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை.
எனினும் அவர்கள் நாட்டில் இருந்து அனுப்பப்படும் வரை அவர்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq5A.html
மின்சார நாற்காலியில் இருந்து மஹிந்தவை காப்பாற்றிய பின்னர் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றார்!– விஜயமுனி
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 10:22.06 AM GMT ]
பிபில மெதகம பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகத்திற்கே போதும் என தோன்றிய இலங்கையை அவ்வாறான நிலைமையில் இருந்து மீட்டு எடுத்ததோடு மின்சார நாற்காலியை நெருங்கிய முன்னாள் ஜனாதிபதியை அதனை விட்டு தூரப்படுத்திய பின்னர் அவர் உட்பட் குழுவினர் தற்போது பிரதமர் நாற்காலியை எதிர்பார்க்கின்றார்கள்.
கடந்த காலத்தில் எங்கள் நாட்டில் இன வெறியினர் கூட்டமாக சென்றார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது இனவெறி கட்சியல்ல, இதில் நல்ல முஸ்லிம் தலைவர்கள் இருந்தார்கள்.
சீ.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர இலவச கல்வியின் தந்தையாக செயற்பட்டார்.
டபிள்யூ.பீ.மொஹமட் சிறந்த கல்வி அமைச்சர், நான் அதனை பயமின்றி கூறுவேன்.
டபிள்யூ.பீ.மொஹமட் சிறந்த கல்வி அமைச்சர், நான் அதனை பயமின்றி கூறுவேன்.
இனவெறியை தூண்டுவதன் மூலம் தவறு செய்தவர்களுக்கு மக்கள் தண்டனை வழங்கிவிட்டார்கள்.
இந்த அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கு நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவோம்.
அன்று நாங்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும், பசில் ராஜபக்சவுக்கும் எதிர்காலம் குறித்து வழிக்காட்டவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவில்லை.
விமல் வீரவனச் இலங்கைக்கு காத்திருந்த மின்சார நாற்காலி குறித்து பேசவில்லை.
பிரதமர் நாற்காலியை குறித்து மாத்திரமே மஹிந்த தரப்பினர் பேசுகின்றார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மின்சார நாற்காலியை கொஞ்சம் தூரப்படுத்தியுள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவது எமது தலையாய கடமையாகும்: சி.சிறீதரன் பா.உ
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 10:46.36 AM GMT ]
சாவகச்சேரி லிகோறியா முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி கடந்த 14ம் திகதி நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக அவர் கலந்துகொண்டு முன்பள்ளிச்சிறார்களை மதிப்பளித்து பாராட்டி உரையாற்றினார்.
இன்றைக்கு நமது கண்களாக இருக்கின்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை வளம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் வழிநடத்தலில் சிறுவர்களின் வெளிப்பாடுகளை காணுகின்ற மகிழ்ச்சி தருகின்றது.
முன்பள்ளிகளால் ஆற்றப்படும் பணி சிறுவர்களின் மனதுகளோடு பேசுவது. அது ஒரு வகையான தாய்மையுடன் கூடிய அரவணைப்பு. அது எல்லோராலும் செய்து விட முடியாது. அதை முன்பள்ளி ஆசிரியர்கள் செய்கின்றார்கள். அவர்களின் கையில் பிள்ளைகளை தந்துள்ளோம் என்பதை விட எமது இனத்தின் எதிர்காலத்தை தந்துள்ளோம் என சொல்வதுதான் பொருத்தம். இன்றைக்கு நம் சமுகத்தில் அரங்கேற்றப்படும் சமுகப்பிறழ்வுகளுக்கு மத்தியில் இந்த சின்னஞ் சிறார்கள் மனதுகளில் கறைபடாமல் அழைத்துப் போய் அடுத்த காலத்தின் விடிவெள்ளிகளாக ஒப்படைக்க வேண்டும். இது எங்கள் எல்லோரது கைகளிலும் உள்ள கடமை. இந்த முன்பள்ளிச்சிறார்களின் உற்சாகத்துக்கும் ஊக்கத்துக்கும் என் பாராட்டுக்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq5D.html
Geen opmerkingen:
Een reactie posten