[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 07:52.08 AM GMT ]
அத்துடன் கற்ற சமூகம் கண்மூடித்தனமாக விடயங்களை கையாளாமல் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு ,ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மக்களின் அழைப்பின் பேரிலேயே அவ்விடத்திற்கு சென்றேன்.
அதனை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நான் அரசியல் பலத்தினை பயன்படுத்தியதாக உண்மைக்கு புறம்பான வகையில் இலங்கை ஆசிரிய சங்கத்தினை சேர்ந்த மட்டக்களப்பு கிளை செயலாளர் தெரிவித்து வருகின்றார்.
இது அவரின் குறுகிய நோக்கத்தினைக் கொண்ட கருத்தாகவே நான் நோக்குகின்றேன். ஒரு அதிகாரியிடம் ஒரு பிரச்சினையை கொண்டுசெல்லும்போது அதனை ஆராயவேண்டியது அவரது கடமையாகும்.
அதனைப் போன்றே ஒரு அரசியல்வாதியிடம் மக்கள் கோரிக்கையிடும் போது அது தொடர்பில் ஆராயவேண்டியது அந்த அரசியல்வாதியின் கடமையாகும்.மக்கள் எங்களை வாக்களித்து மாகாணசபைக்கு அனுப்பியது வீட்டுக்குள் இருந்து அரசியல் செய்வதற்கு அல்ல.அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே.
அந்தவகையிலேயே ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு,அப்பகுதி மக்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினேன்.
ஆனால் அதனை திரிபுபடுத்தி அப்பிரதேசத்தினை சேர்ந்த சிலர் திட்டமிட்ட வகையில் என் மீது இவ்வாறான அவதூறுகளை மேற்கொண்டு வருகின்றனர்.இது அவர்களின் காழ்புணர்ச்சியையே காட்டுகின்றது.
அதுமட்டுமன்றி ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தின் பெற்றோரை வேறுவிதமாக கூறி அழைத்து வந்து எனக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக அது சிலரால் திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டுள்ளது. கல்வி சங்கங்களில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து எனக்கு எதிராக நடாத்தியுள்ளனர்.
இதன்போது புதிய அதிபரை பாடசாலைக்கு செல்லவிடாது நான் தடுத்ததாக கூறும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை.அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.இது என் மீதும் எனது கட்சி மீதும் சேறுபூசும் விடயமாகவே இதனை நான் கருதுகின்றேன்.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பிலும் இவ்வாறு மக்களை தூண்டுவது தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்காக பணியாற்றிவரும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் எனது பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்திவரும் எனது நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றேன். நாங்கள் அரசியல்வாதிகள் நாங்கள் என்றும் மக்கள் பிரச்சினைகளை பின்நின்று பார்க்கமாட்டோம்.நாங்கள் எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையானவற்றை தொடர்ந்து மேற்கொள்வோம்.
எதிர்வரும் காலங்களில் கல்வி வளர்ச்சிக்கு தடையாகவுள்ளோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாணசபை ஊடாக எடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி: அதிபர் நியமிப்பில் கிழக்கு மாகாண அமைச்சரின் தலையீடு: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq3J.html
சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிக்காவை களமிறக்க முயற்சி
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 08:16.50 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில், அவர் வேறு கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு போட்டியாக களமிறங்க கூடிய ஒருவர் சந்திரிக்கா குமாரதுங்க என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் அதிகமானோர் அடங்கிய குழுவினரின் கலந்துரையாடலின் போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறுவனரான பண்டாரநாயக்கவின் இரத்த உறவான சந்திரிக்கா சுதந்திர கட்சிக்கு மக்கள் ஆதரவை பெற்றுக்கொடுப்பார்.
மேலும் இவ் யோசனைக்கு சந்திரிக்கா குமாரதுங்க ஒரு போதும் மறுப்பு தெரிவிக்கமாட்டார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நியாயப்படுத்த அரசு முயற்சி? - அனுமதிக்கமாட்டோம் என்கிறார் கே.வி.
[ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 08:30.33 AM GMT ]
சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா அவர்கள் லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கு சந்தேகநபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கு அரசதரப்பு சட்டத்தரணிகள் ஜனாதிபதியிடம் உத்தரவை பெற்று நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளமையானது மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து வித்தியா கொலைவழக்கின் சட்டத்தரணி தவராசா அவர்களிடம் எமது செய்தியாளர் பின்வரும் கேள்விகளை தொடுத்திருந்ததார்.
அதில்மிக முக்கியமாக வித்தியா கொலைவழக்கு விசாரணை கைதிகளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதன் ஊடாக தமிழ் மக்களை அடக்கியாளுவதற்கு இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தத் தடைச்சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களை வைத்தே நியாயப்படுத்த முற்சிக்கின்றதா?
இத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளின் கைதுகளை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றதா?
வித்தியா கொலைவழக்கை பயங்கரவாத சாயம்பூசி வழக்கை திசைதிருப்ப முயற்சிக்கப்படுகின்றதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விளக்கங்களை தருகிறார் சட்டத்தரணி தவராசா அவர்கள்.
- வித்தியாவின் படுகொலை! 2ம் கட்ட விசாரணை! - சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா
- வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்
- வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் களத்தில்!
- வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!
- நான்காம் மாடியில் சந்தேக நபர்கள்!
- வித்தியா கொலைவழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள்.
- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வித்தியா கொலை வழக்கு! கொலையாளிகளை கண்டுபிடிக்குமா?
http://www.tamilwin.com/show-RUmtyGSaSUfq4D.html
Geen opmerkingen:
Een reactie posten