தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 juni 2015

வித்தியா கொலைவழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள்.

யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலைவழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்கள் 9 பேரும் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்
இன்றைய வழக்கு விசாரணையில் அரசதரப்புச் சட்டத்தரணிகளாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வந்திருந்த இரண்டு சட்டத்தரணிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் மற்றும் சகோதரன் மற்றும் சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
அதேவேளை இன்றைய வழக்கு விசாரணையை கொழும்பில் இருந்து வந்திருந்த பிரபல சட்டத்தரணிகளின் உதவிச் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு வருகைதந்து வழக்கினுடைய போக்கினை அவதானித்துள்ளனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் கொலையினை நேரில் கண்ட சாட்சிகள் இல்லையென்பதால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேரையும் எதிர்வரும் ஒரு மாதத்திற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம்திகதி மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyGSZSUfq0F.html

Geen opmerkingen:

Een reactie posten