தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juni 2015

சுவிஸ் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியிட்ட அரசு!

சுவிட்சர்லாந்து குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் தொடர்பாக சூரிச் மண்டல நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தை சேர்ந்த SP, GLP, Green மற்றும் AL கட்சிகளின் மாநகர சபை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், சூரிச் மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் சுவிஸ் குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டினர்களாக இருந்தாலும் அவர்களுடைய நாட்டுடமை தொடர்பான தகவல்களை அரசு மற்றும் பொலிசார் வெளியிடும் அறிக்கையில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தாள்கள் மட்டுமின்றி, அந்த குற்றம் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நிருபர்கள் கூட குற்றவாளிகளின் நாட்டுடமையை வெளியிடக்கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக பேசிய SP Group-ன் தலைவரான Min Li Marti கூறுகையில், குற்றம் புரிந்துள்ள நபரின் நாட்டுடமையை பற்றி தெரிந்துக்கொள்வது என்பது அந்த குற்றம் தொடர்பான விசாரணைக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்றார்.
மேலும், சுவிஸில் ஒரு குற்றம் நடைபெற்றால், உடனடியாக வெளிநாட்டினரை தான் விசாரிக்கும் ஒரு தவறான போக்கு உள்ளதால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் என்றார்.
குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருடைய நாட்டுடமை பற்றி கூறினால், அதன் மூலம் அந்த நபரின் மதம், பாலியல் நாட்டம், அரசியலில் அவரது பார்வை உள்ளிட்ட விடயங்களை மட்டுமே சிறிதளவு தெரிந்துக்கொள்ள முடியுமே தவிர மிக முக்கிய காரணிகளான வயது, கல்வி, இந்த சமூகத்தில் அவருக்கு இருக்கும் அணுகுமுறை உள்ளிட்டவைகளை தெரிந்துக்கொள்ள முடியாது என்றார்.
இருப்பினும் சூரிச் மண்டல நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பெரும்பாலான மக்கள் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், சுமார் 90 சதவிகித மக்கள் ‘ஒரு குற்றவாளியின் நாட்டுடமையை பற்றி அறிந்துக்கொள்வது அவசியம்’ என வாக்களித்துள்ளனர்.
9 சதவிகித மக்கள் மட்டுமே குற்றவாளியின் நாட்டுடமை தொடர்பான தகவல்கள் அவசியம் அல்ல என வாக்களித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், சுவிஸில் உள்ள 26 மண்டலங்களிலும் சூரிச் மண்டல பொலிசார் தான் இதனை முதலில் அறிமுகப்படுத்த உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten