தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 juni 2015

அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம்: கவலையில் ஒபாமா

அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் மீது வெள்ளை இனத்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருவது குறித்து ஜனாதிபதி ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.
தெற்கு கரோலினா மாகாணத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமையன்று வெள்ளை இன வாலிபர் ஒருவர் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் தேவாலய பாதிரியார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் மிகப்பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிகப்பெரும் கவலையும், கோபத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது, இது போன்ற மிகப்பெரும் வன்முறை சம்பவங்கள், மற்ற வளர்ந்த நாடுகளில் நடைபெறவில்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூடு முட்டாள்தனமானது என்று தெரிவித்த அவர், இது போன்ற குற்றங்களை தடுக்க மீண்டும் ஆயுதம் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த, தேர்தலின்போது சரியான தலைவர்களை தெரிவுசெய்யுமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://newsonews.com/view.php?22oMC303lOS4e2BnBcb280Mdd3088bc2nBLe43OlR022gAK3


பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கி:தேவாலயத்துக்குள் புகுந்து 9 பேரை சுட்டுக்கொன்ற வாலிபன் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 19 யூன் 2015, 12:10.06 மு.ப GMT ]
அமெரிக்காவில் தேவாலயத்துக்கு புகுந்து 9 பேரை சுட்டு கொன்றவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் கரொலினா பகுதியில் உள்ள சார்லெஸ்டனில் புகழ்பெற்ற இமானுவேல் ஏஎம்இ தேவாலயம் உள்ளது.
இந்நிலையில் கடந்த புதனன்று இரவில் தேவாலயத்தில் இருந்த ஒருவர் மற்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இந்த தாக்குதலில் தேவாலயத்தின் மதபோதகர் ரிவெரெண்ட் கிலிமெண்டா பின்க்கினி உட்பட 9 பேர் பலியாகியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 6 பேர் பெண்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் டையிலன் ஸ்டொர்ம் ரூப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை வியாழனன்று பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன வேறுபாடு காரணமாக இந்த படுகொலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருப்பர்களுக்கு சொந்தமான அந்த தேவாலயத்தில் வெள்ளைய வாலிபரான ரூப் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இது மிகவும் முட்டாள்தனமான செயல், நாட்டின் பிரச்சனையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் நினைவுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஹிலாரி கிளிண்டன் உட்பட பிற அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten