ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி – மகிந்த என இரண்டு அணிகளாக இருப்பதால், கட்சி ஏற்கனவே பிளவுப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த தரப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காக மைத்திரி – மகிந்தவை ஐக்கியப்படுத்தும் குழுவொன்று நியமிக்கப்பட்ட போதிலும் இருவரையும் இணக்க வைக்க முடியாது போயுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Geen opmerkingen:
Een reactie posten