[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 05:02.55 AM GMT ]
இது தொடர்பில் வெளியாகிய செய்தி போலியானதென அவர் பி.பி.சி செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் வேட்பாளரை பெயரிடுவது கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என குறிப்பிட்ட அவர், இக்குழுவினால் இவ்வாறான பரிந்துரைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன கலந்துரையாடியதாகவும் கட்சியின் ஒற்றுமையுடன் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் செயற்படுவதற்கே இக்குழுவிற்கு முன்னிடம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சின் முக்கிய செயலாளர்கள் ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 05:30.33 AM GMT ]
இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தற்பொழுது இயங்கிவரும் பொலிஸ் நிதி மோடி விசாரணை பிரவினால் நடத்தப்பட்டு வரும் நிதி மோசடி விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்காது ஒதுங்கிக்கொள்வதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்திற்கு எதிரான விசாரணைகளுக்கே அஞ்சுவதாகவும் இதில் இந்த செயலாளர்கள் அமைதியை பேணுவதால் அல்லது ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாகவும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் அரசியல்வாதிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவின் முன்னாள் செயலாளர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்றாக அறிந்துள்ளார்.
அந்த செயலாளர்களாலேயே மகிந்த ராஜபக்சவை அமைதிப்படுத்த முடியும்.எனவே இவர்கள் எதிர்வரும் தினங்களில் அவரையும் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft5A.html
Geen opmerkingen:
Een reactie posten