தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 juni 2015

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது

20வது திருத்தம் தொடர்பில் இணக்கமில்லை என்றால் பொதுத் தேர்தலுக்கு செல்வது பொருத்தமானது!– சோபித தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 05:47.09 AM GMT ]
அனைவரும் இணங்காவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பதிலாக அரசாங்கத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்கும் என மாதுளுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்ளும் 20வது திருத்தச் சட்டம் அனைத்து கட்சிகள், மதங்கள், இனங்கள் என அனைவருக்கும் நியாயத்தை நிலைநாட்டும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
கோட்டே ஸ்ரீ நாகவிகாரையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மாதுளுவாவே சோபித தேரரை சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர்.
இதனையடுத்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 26 இந்திய மீனவர்கள் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 21 யூன் 2015, 05:55.22 AM GMT ]
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேர் இன்றைய தினம் காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை வடமராட்சி கடற்பகுதிக்குள் 3 படகுகளில் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் தொடர்பாக வடமராட்சி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடற்படையின் கரையோர ரோந்துப்படை குறித்த மீனவர்களை கைது செய்துள்ளது.
கைதான மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த 26 மீனவர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் மீனவர்களுடன் மூன்று மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRVSUft5E.html

Geen opmerkingen:

Een reactie posten